உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை உமரிக்காடு கிளை
தோற்றமும் வளர்ச்சியும்
உலக உயிர்கள் அனைத்தும் உய்வடைய வேண்டும் என்று எண்ணுபவர்கள்
ஞானிகள். அந்த ஞானிகளின் வழியில் தோன்றியவர்தான் நம்முடைய குருநாதர்.
சங்கர சுவாமிகளின் குருவழிப்பரம்பரையில் தோன்றிய நமது குருநாதர்
ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் அவர்கள் ஏற்படுத்தியதுதான் உலக
அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை.
ஞானசபைக்கிளை உமரிக்காடு. நம்முடைய ஊரில் ஆன்மீகம் என்றால் என்ன
என்று தெரியாத ஊரில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களையும் உருவாக்கி ஞானத்தை
போதித்து ஞான சபையையும் கட்ட முதல் அடித்தளம் போட்ட நமது குருநாதர்
அவர்கள் அடுத்தபடியாக கனம் பொருந்திய M.பாஸ்கர் அவர்கள் முதன் முதலில் நம்
ஊரில் 1999ஆம் வருஷம் குருநாதரின் 61வது பிறந்த நாள் விழாவை உமரிக்காடு
கோட்டைவாழ் அய்யன் திருக்கோவில் வளாகத்தில் அன்னக்கொடி ஏற்றி சிறப்பாக
செய்தார்கள். இதில் ஊர் பெரியவர்கள், அய்யன்பாண்டியன், புஷ்பராகம் மற்றும்
அன்பர்கள் கலந்து கொண்டு ஆன்மீக கருத்துக்களை ஆய்வு செய்துள்ளார்கள்.
அன்று முதல் மாணவர்கள் பல்கி பெருகி உள்ளார்கள். அதன்பின் முதலில்
13/04/2012 திருவள்ளுவர் ஆண்டு 2043 சித்திரை மாதம் 1ஆம் தேதி ஒரு வீட்டில்
உமரிக்காடு ஞானசபை திறக்கப்பட்டது. அந்த சபை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து
ஞானசபைக்கு இடம் பத்திரப்பதிவு செய்த நாள் 26.8.2015 புதன்கிழமை. அன்று ஊரில்
அம்மன் கோவில் கொடை முடிந்து மறுநாள் உணவு எடுக்கும் நாள். அந்த
திருநாளில் பத்திரம் முடிப்பது என்பது மிகவும் முடியாத காரியம். அதையும்
குருவருளும் திருவருளும் முடித்துக் கொடுத்தார்கள். அதன்பிறகு சில மாதங்களில் அதாவது திருவள்ளுவர் ஆண்டு 2046 ஐப்பசி 10
ஆம் நாள் அடிக்கல் நாட்டு விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.
ஞானசபையின் அனைத்துக் கிளை அன்பர்கள் பங்களிப்போடு நாள்ஒரு
மேனியாகவும் பொழுது ஒரு வண்ணமாகவும் தியான மண்டபமாக மாறி சிறப்பாக
உருவாகியது.
இந்தப் பணியைச் செய்து கும்பக்கல் வைத்த நாள்
திருவள்ளுவர் ஆண்டு 2047 சித்திரை 10 ஆம் நாள் (23/4/2016) ஆம் தேதி ஆகும். அதன்பிறகு இங்குதான் நாள்தோறும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை
சமாராதனை நடைபெறும். அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆன்மீக
கருத்துக்களைப் பற்றி ஆய்வு செய்வோம். தியான மண்டப பணிகள் முழுமை பெற்று
குருநாதர் பிறந்த நாள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே மறைகளில் மறைந்துள்ள
மறைபொருளாகும் என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் ஞானசபைத் திறப்பு விழா
என்னும் முப்பெரும் விழா நாள் திருவள்ளுவர் ஆண்டு 2047 ஐப்பசி 21 ஆம் நாள்
(6/11/2016) சபைத்திறப்பு விழா சீரோடும் சிறப்போடும் இனிதே நடைபெற்றது.
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை உமரிக்காடு - நிகழ்வுகள்
- தினசரி அதிகாலை தியானம் காலை 5.00 மணிக்கும் மற்றும் இரவு 7.00 மணிக்கு சத்சங்கம் குருவின் திருவருளோடு நடந்து வருகின்றது.
- ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு திருக்கூட்டம் மற்றும் சமாராதனையும் நடைபெற்று வருகின்றது.
- பெண்களுக்கான தியானம் வியாழக்கிழமை தோறும் மாலை 4.00 மணி அளவில் நடந்து வருகின்றது.
- ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறுதோறும் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றம் திருக்கூட்டம் நடந்து வருகின்றது.
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை உமரிக்காடு - புகைப்படங்கள்
தொடர்புக்கு
தியான மண்டபம் - முகவரி
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை கிளை – உமரிக்காடு
தியான மண்டபம், 4/9a மெயின்ரோடு, உமரிக்காடு – 628151, தூத்துக்குடி மாவட்டம்.