உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை சென்னை மாதனாங்குப்பம் கிளை

தோற்றமும் வளர்ச்சியும்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (குறள் – 08)
முதல் முறையாக 1992இல் குருநாதர் அவர்கள் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு ஆன்மீக பயணமாக வந்த போது முதல் சீடர் S.அய்யம் பெருமாள் சென்னை சீடரை சந்திக்க வருகிறார்கள் அதைத்தொடர்ந்து , சென்னை ரெட்டேரி மணிமேகலை ஏஜென்சி கடையில் ஆன்மீக கல்வி S. அய்யம் பெருமாளுக்கு மாதம் ஒன்று மற்றும் இரண்டு முறை சென்னை வந்து கற்றுக் கொடுக்கிறார் நம் குருநாதர். நம் குருநாதர் அதை தொடர்ந்து அய்யம் பெருமாள் வாடகைக்கு இருந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து பயிற்சி கொடுப்பார்கள். அதன் பிறகு I.ஆத்தியப்பன், S.விஜயன், லோகராஜ் மற்றும் பலர் ஆன்மீக பயிற்சி பெற்று உணர்வாளர்கள் ஆனார்கள். அப்போது நம் குருநாதரின் யோசனைப்படி கூட்டு சமாராதனை செய்ய சென்னை திருவான்மியூர ‘பாம்பன் சுவாமிகள்” கோவிலில் பௌர்ணமி தோறும் சமாராதனை மேற்கொண்டு அதனை தொடர்ந்து அடிக்கடி சமாராதனையை மேற்கொண்டு அதனை தொடர்ந்து சென்னை ரெட்டேரி திரு. மகேந்திரன் அவர்களின் இடத்தில் ஓலை குடிசை அமைத்து அதில் சபையை தொடங்கினோம். அதில் போதிய வசதியில்லாததால், குருநாதர் ஆசியுடன் சென்னை வில்லிவாக்கம் சிவன் கோவில் அருகில் வாடகைக்கு ரூம் எடுத்து சுமார் ஐந்து ஆண்டு ஆன்மீக பயிற்சி மேற்க்கொண்டோம்.
அப்போது அன்புராஜன், கோவிந்தராஜ். தேவந்திரன், சேகர் மற்றும் பலர் உணர்வாளர்கள் ஆனார்கள். அப்போது கந்தன் சாவடியில் வசிக்கும் சேகர், மகேஷ், ஈஸ்வர், பரந்தாமன் உணர்வாளர்கள் துணையுடன் பயிற்சி மேற்கொண்டோம். அதன்பிறகு S. அய்யம் பெருமாள் சீடர் சென்னை வில்லிவாக்கம் தாதன்குப்பத்தில் நிறுவனம் அமைத்து, அதன் பக்கத்தில் ஒத்திக்கு ரூ. 3,00,000/- கொடுத்து நம் குருநாதர் ஆசியுடன் ஒத்திக்கு வீடு வாங்கி அதில் உணர்வாளர்கள் ஒன்று சேர்ந்தோம். அப்போது புஷ்பராகம் ஆகிய நான் ஊரில் இருந்து சென்னை வந்து விட்டேன்.திரு பாண்டியன் அண்ணாச்சி குருநாதரிடம் அறிமுகம் செய்து வைத்து 1990ல் தீட்சைப் பெற்று தந்தார்கள், சில தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்தி வீட்டை காலி செய்துவிட்டு கடப்பாரோட்டில் S.அய்யம்பெருமாள் சீடர், Perumal & Co குடோனில் சபையை ஆரம்பித்து அருண் மற்றும் பலர் உணர்வாளர்கள் ஆனார்கள்.

சுமார் மூன்று ஆண்டு காலம் அங்கு சபை நடந்தது. உணர்வாளர்கள் அதிகம் ஆகிவிட்டார்கள். அப்போது திரு கார்மேகராஜ், திரு கோவிந்தராஜ், அன்புராஜன், S.அய்யம் பெருமாள், ப.ராஜன், A.Y.பொன்வேல் மற்றும் பலர் துணையுடன் ஒத்தி பணம் ரூ. 3,00,000 சேர்த்து சென்னை மாதனகுப்பம் இடத்தில் சொந்தமாக இடம் வாங்க முடிவு செய்து 24/07/2009 அன்று ஒரு அருமையான இடம் வாங்கப்பட்டது. 27/07/2009 அன்று காலை 7.40 முதல் 8.20 மணிக்குள் வாஸ்து அடிக்கல் நாட்டும் விழா, குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள், பொருளாளர் கனம் பொருந்திய பாண்டியன் அண்ணாச்சி மற்றும் திருக்கூட்டத்தினரால் சீரோடும் சிறப்போடும் நடைப்பெற்றது. 27/07/2010ல் தீபத் தூண் ஏற்றி பால்காய்ப்பும் நடந்தது. பின் 7-11-2010 அன்று முழு வேலையும் நிறைவுப்பெற்று குருநாதர் மகாகனம் தங்கசுவாமிகள், பாண்டியன் அண்ணாச்சி மற்றும் செயலாளர் அய்யன்பாண்டியன் அவர்களின் முன்னிலையில் திறப்பு விழா சீரோடும், சிறப்போடும் நடைப்பெற்றது. அதில் அனைத்து கிளை தலைவர்களும், உணர்வாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள். குருநாதர் மற்றும் கனம் பொருந்திய பாண்டியன் அண்ணாச்சி அவர்கள் ஆலோசனை படி சபைகள் இருக்கும் ஊர்களில் எல்லாம் அன்னகொடி ஏற்றி வைக்கப்பட்டது.

அன்னகொடி ஏற்றிய இடமெல்லாம் செல்வ செழிப்புடன் வளர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், வருஷந்தோரும் ஆண்டு விழாவும், மாதம் மாதம் முழு நிலவு திருக்ககூட்டமும், மகம் பூசை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாடு நலம்பெற வான்மழை பொழிந்து வையகம் செழித்திடவும், அன்பர்களின் செயல்கள் யாவும் சிறப்பான முறையில் நடந்து, அருளும் பொருளும் நிறைவாக கிடைத்திடவும், தினமும் சமாராதனை நடைபெற்று வருகிறது. மேலும் குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் இயற்றிய 19 நூல்களில் உள்ள அற்புதமான கருத்துகளை உயிர் உய்வடைய தேவையான விளக்க உரைகள் முழுவதும் சபைக்கு வரும் உணர்வாளர் அனைவருக்கும் எடுத்துச் சொல்லி, அதில் சத்விசாரம் (ஆராய்ச்சி) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
(குறள் -391)

வாழ்க வளர்க!
குருவே போற்றி  குருவே துணை!

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை சென்னை - நிகழ்வுகள்

  • தினசரி அதிகாலை தியானம் காலை 5.00 மணிக்கும் மற்றும் இரவு 7.00 மணிக்கு சத்சங்கம் குருவின் திருவருளோடு நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு மாதமும் அய்யன்பட்டி இராஜரி´ சங்கரசுவாமிகளின் ஒடுக்கம் பெற்ற மகம் நட்சத்திரத்தில் பூசை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி மற்றும் அமாவாசை திருக்கூட்டம் இரவு 10.00 மணிக்கு நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு திருக்கூட்டம் மற்றும் சமாராதனையும் நடைபெற்று வருகின்றது.
  • பெண்களுக்கான தியானம் வியாழக்கிழமை தோறும் மாலை 4.00 மணி அளவில் நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறுதோறும் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றம் திருக்கூட்டம் நடந்து வருகின்றது.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை சென்னை - புகைப்படங்கள்

தொடர்புக்கு

தியான மண்டபம் - முகவரி

உலக அறிவார்ந்தோர் இயற்க்கை ஞானசபை கிளை – சென்னை தியான அரங்கம், சேனைத்தலைவர் நகர், மாதனாம்குப்பம், சென்னை – 600053