உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை சிவத்தையாபுரம் - தலைமையகம்

தலைமையகமானது தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சிவத்தையாபுரம் என்ற கிராமத்தில் சேர்வைக்காரன்மடம் மெயின் ரோட்டில் 1999 ஆம் ஆண்டில் சிறு ஞான சபையாக கட்டப்பட்டது. அதற்கு முன்பு ஏரல் ஆற்றங்கரையில் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் திருக்கூட்டம் நடைபெற்றது. 2000 வது ஆண்டு உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. இந்த ஞான சபையின் நிறுவனர், தலைவர் ஞானவள்ளல் மகாகனம் தங்க சுவாமிகள் ஆவார். பிறகு சிவத்தையாபுரத்தில் 2008இல் தியான அரங்க திருப்பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டது. அனைத்து கிளை ஞான சபைகளுக்கும் தலைமையகத்தின் கீழ் செயல்படுகிறது. மற்றும் 10 இடங்களில் கிளைகள் சொந்த இடமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்தின் முக்கிய நோக்கமே அனைத்து அன்பர்களுக்கும் ஆங்காங்கே கூட்டு சமாராதனை, சத்சங்கம் மற்றும் தியானம் செய்ய பயன்படுத்திக் கொள்ள வேண்டியது.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை சிவத்தையாபுரம் கிளையில் தினந்தோறும் காலை 4.30 மணியளவில் அதிகாலை தியானம் மற்றும் சமாராதனை நடைபெற்று வருகிறது. தினந்தோறும் இரவு 8.30 மணியளவில் இரவு தியானம் மற்றும் சமாராதனை நடைபெற்று வருகிறது. பிரதி மாதம் அமாவாசை திருக்கூட்டமும் சமாராதனையும் நடைபெற்று வருகிறது.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை தலைமையகம் - சிவத்தையாபுரம் நிகழ்வுகள்

  • தினசரி அதிகாலை தியானம் காலை 5.00 மணிக்கும் மற்றும் இரவு 7.00 மணிக்கு சத்சங்கம் குருவின் திருவருளோடு நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு மாதமும் அமாவாசை திருக்கூட்டம் இரவு 07.00 மணிக்கு நடந்து வருகின்றது.

தொடர்புக்கு