"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்
Dr. திருமாவளவன் MDS
மேடவாக்கம்,
சென்னை
விழிப்பு நிலை வரும்வரை சொப்பனம் நிஜம் என மனம் நினைக்கும். அதே போல் உண்மையை சந்திக்கும் வரை மனம் அறியாமையிலேயே மூழ்கி இருக்கும். நான் என் குருநாதர் திரு ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகளை சந்தித்தது 2005 ஆம் ஆண்டு. அன்று இரவே எனக்கு தீட்சையும் வழங்கப்பட்டது. எம்குருநாதர் தன் சீடர்களுக்கு அடிக்கடி கூறுவது தீட்சைக்கு முன் தீட்சைக்குப் பின் என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது தான். ஒப்பிட்டுப் பார்த்தப்பின் எவ்வளவு கற்பனையில் நான் இருந்தேன் என்பது எனக்கு வியப்பை அளித்தது. ஞானிகள் பல வகை உண்டு என கைவல்லியம் கூறுகிறது. இதை விளக்கின் பெருகும். என் குருநாதர் இல்லற ஞானியாவார். ஆன்மீகத்தில் மட்டுமல்ல சீடன் மேற்கொள்ளும் தொழிலிலும் முதன்மையாக வரவேண்டும் என்பதே அவரின் அவா. போலி ஞானிகள் பலரும் ஆசிரமம் வைத்தும் சந்நியாசம் என்ற பெயரிலும் பெரும் செல்வந்தர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இவரோ “காட்டிற்குச் சென்று துறவறம் என்று சொல்லி மனதை அடக்க முடியாதவர்கள் அஞ்ஞானி என்றும் இல்லறத்தில் இருந்தே மனதை அடக்க தெரிந்தவன் எவனோ அவனே மகா ஞானி” என்கிறார். சுருக்கமாக சொன்னால் துறவறம் என்பது உடலுக்கு அல்ல உள்ளத்துக்கே என்பது தான். அவர் உருவாக்கிய சீடர்களில் நானும் ஒருவன் என்பது எனக்குப் பெருமையே. நூல் ஆராய்ச்சியை அவர் விரும்புவார் ஆனால் ஆன்மீகத்தில் அனுபவமே துணை நிற்கும் என அவர் வலியுறுத்த கேட்டுள்ளேன். என்னோடு அவர் பகிர்ந்த கருத்துகள் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.
01
“ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது”
“எண்ணெய் இல்லாமல் விளக்கு எரியாது”
“உடம்பை வளர்த்தால் தான் உயிர் வளரும்”
“எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு”
” நாம ரூபங்கள் அழிந்தால் தான் ஞானம் தோன்றும்”
“என் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் உண்டு.”
“ஞானப் பாதையில் தொடர்ந்து பயணிக்க குருவருள் அவசியம் என்பதே உண்மை.”
“சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் என்குருநாதர் செதுக்குவது சிலைகளை அல்ல சிற்பிகளை” மேலே கூறிய வாக்கியங்களை உணர்ந்தோர் அறிவர். அறியாதவர்கள் இனி உணர்வர்.
02
நன்றி!
Dr. T. சசிரேகா BDS,
மேடவாக்கம், சென்னை
நான் சசிரேகா என் கணவர் பெயர் மு. திருமாவளவன் அவரும் இந்த ஞான சபையில் ஒருவர். அவர் தியானம் செய்யும் போது நான் யோசித்திருக்கிறேன். தியானம் என்றால் என்ன? ஏன் செய்ய வேண்டும்? என் திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு நம் குருநாதரை சந்தித்தேன். அப்பொழுது எனக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன. அதன் பிறகு சுமார் 2 வாரம் கழித்து என் பிரச்சினைகள் ஒன்று ஒன்றாக குறையத் தொடங்கியது. ஆனால் எனக்கு புலப்படவில்லை.
குருநாதர்தான் இதற்கு காரணம் என்று அதன் பிறகு ஒரு நாள் என் கணவருக்கு காய்ச்சல் குறையாமல் மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அச்சமயம் நானும் அவருடன் இல்லை. என் பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தேன். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என் துணைவரை நினைத்து பிறகு நம் குருநாதருடன் தொலைபேசியில் பேசினேன். ஐயா எனக்கு பயமாக உள்ளது. என் கணவருக்கு என்னவென்றே தெரியவில்லை. 14 நாட்களாக காய்ச்சல் குறையவே இல்லை. ஐயா நீங்கள்தான் என் கணவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அழுதேன். உடனே என் குருநாதர் அவர்கள் “கவலைப் படாதீர்கள்”, எதிர்மறையாக சிந்திக்காதீர்கள் “அவருக்கு ஒன்றுமில்லை” “எல்லாம் சரியாகி விடும் என்று கூறினார்கள்.
01
உடனே நம் குருநாதர் என் கணவரை தொலைபேசியில் அழைத்து உங்கள் மனைவி ரொம்ப பயப்படுகிறார்கள், “காய்ச்சல் சரியாகி விடும்” தைரியமா இருக்கச் சொல்லுங்கள் உங்கள் மனைவியை என்று சொன்னார்கள். அதுவரையில் 100 டிகிரி ஆக இருந்த காய்ச்சல் நம் குருநாதர் பேசி வைத்த பிறகு 99 டிகிரிக்கு வந்து விட்டது. அதற்கு பிறகு நார்மல் டெம்பரேச்சர் வந்து விட்டது. அங்கிருந்த மற்றவர்களுக்கு ஆச்சரியம் எனக்கும் தான் உடனே எனக்கு நிறைய சந்தோஷம். மருத்துவர்களுக்கே பெரும் குழப்பத்தை உண்டாக்கிய அந்த காய்ச்சலை எம் குருநாதர் அவர்கள் எளிதாக சரிசெய்தார். அன்று நினைத்தேன் “ஐயா ஒரு தெய்வம்” என்று அதுவரையில் எனக்கு அப்படித்தோன்றியதில்லை.
02
“எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும்” என்று அதன்பின் 27.02.2019 அன்று நான் தீட்சை பெற்றேன். தியானம் செய்து வருகிறேன். தினமும் தூங்குவதற்கு முன் குருநாதரை வணங்குவேன். சிறு சிறு ஆலோசனைகள் நம் குருநாதரிடம் கேட்டுப் பெறுவேன். எனக்கு சிறு இன்னல்கள் வந்தாலும் குருநாதரை எண்ணி தியானம் செய்தால் அந்த இன்னல்களில் இருந்து விடுபட வழி பிறக்கும். குருநாதரின் சொல் கேட்டு ஞானநிலை பெறுவதே என் விருப்பம்.
03
நன்றி!