உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை மதுரை கிளை

தோற்றமும் வளர்ச்சியும்

உடம்பினைப் பெற்று பயனாவதுஎல்லாம் உன்னுள் இருக்கும் உத்தமனை கான் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை மதுரை கிளைஇராஜரிஷி அய்யன்பட்டி சங்கர சுவாமிகளுடைய அருளால் குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் அய்யா தங்க சுவாமிகள் அவர்கள் மதுரையம்பதிக்கு விஜயம்செய்து மதுரை அன்பர்களையும்,மதுரைஞான சபையும் ஆசிர்வதித்து அருள்பாலித்தநிகழ்வு மதுரை ஞான சபை கிளை சுமார் 1998 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு மதுரைக்கு குருநாதரும் பாண்டி அண்ணாச்சி அவர்களும் பலமுறை மதுரைக்கு பஸ் ஏறி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு தன்னுடைய வயது  எதையும் பொருட்படுத்தாது அன்பர்கள் உருவாக்கினார்கள் மதுரையம்பதி ஞான சபை கிளை சுமார்1998ல் நேதாஜி ரோட்டில் போட்டோ செந்தில் அவர்கள் ஸ்டூடியோவளாகத்தில் முதன்முதலாக ஞான சபை அமைக்கப்பட்டது அதன் பிறகு தொடர்ச்சியில் மதுரைஞான சபை கிளை மேலமாசி வீதி ஐயப்பன் கோவில் அருகாமையில் நடைபெற்றது.
ஞான சபையினுடைய கிளைக்காக சொந்தமாக தியான மண்டபம் கிடைப்பதற்காக மதுரை அரும்பனூர் பாண்டியன் நகரில் அமையப்பெற்ற 12 ஆம் நம்பர் பிளாட்டை தலைமையின் உத்தரவுப்படி ஞான சபைகிளைக்கு சொந்தமாக பதியப்பட்டது அந்த இடத்தைபெறபட்டதே, ஒரு அற்புதம் அந்த இடத்தை மதுரை ஞானசபைக்கு கிடைப்பதற்கு உண்டான அந்த அற்புதத்தை என் சொல்வேன் என் சொல்வேன் குருநாதர் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் பொழுது தீர்மானத்தில்! மதுரை ஞானசபைக்கு தியான மண்டபத்திர்க்கு இடம் புதிய! இடத்தை முடிக்க போகிறோம் என்பதை எழுதிவிட்டு தான் வந்தோம் எனவும் அது எப்படி மாற்றம் ஏற்பட முடியும் என்பதை குருநாதர் கூறுகையில் அவர்களுடைய அந்த ஆசீர்வாதம், ஞானசபை வளர வேண்டும் பிள்ளைகளெல்லாம் நன்றாக கல்வி கற்பதற்கும், இது ஒரு ஆயத்தமான தியான அரங்கம் இடமாக அமையவேண்டும் என்பதற்காக அய்யா அவர்களுடைய அந்த ஆசீர்வாதம் அருளும் இன்றும் நாம் அனைவரும் சுதந்திரமாக மகிழ்ச்சியாக அந்த இடத்தில் ஒன்றாகஅமர்ந்து தியானித்துக் கொண்டிருப்பதற்கு ஏதுவாக அமைத்துகொடுத்துள்ளார்கள்
20.04.2012 ஞான சபைக்கு சொந்தமாக இடம் வாங்கி அதை உலக அறிவார்ந்தோர் இயற்கைஞான சபை அறக்கட்டளைபெயரில் முறையாக பதிவு செய்யப்பட்டது மதுரை ஞான சபையின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா கடகம் திங்கள் ஆடி மாதம் 11ஆம்நாள் வியாழக்கிழமை 26.7.2012 தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரையம்பதியில் பாண்டியன்நகரில்,அரும்பனூரில் அய்யன்பட்டி அருள்மிகு ராஜரிஷி பரமேட்டிய குருபிரான் சங்கர சுவாமிகள் திருவருளால் ஞானவள்ளல் மகாகனம் தங்க திருச் சமூகம் தங்க சுவாமிகள் திருக்கரத்தால் மதுரை ஞானசபை கிளை புதிய கட்டிட அடுக்கல் நாட்டு விழா சீரோடு சிறப்போடும் நடைபெற்றது அனைத்து அன்பர்கள் வருகையில் சிறப்பாக நடைபெற்றது மேலும் கட்டுமான திருப்பணிகள் தொடர்ச்சியாக ஞான வள்ளல் மகாகனம் தங்க சுவாமிகளுடைய ஆசியிலும் பொருளாளர் கனம் பொருந்திய பாண்டியண்ணன் அவர்கள் முழு முயற்சியிலும் துணைத் தலைவர் அறவாழி அண்ணன் அவர்களுடைய முழு முயற்சியிலும் செயலாளர் அய்யன் பாண்டியன் அவர்கள் முழு முயற்சியிலும் கட்டிடகட்டுமான திருப்பணிகள் தொடர்ச்சியாக அனைத்து ஞான சபை கிளையில் உடைய அன்பர்கள் உடைய பங்களிப்பிலும் அவர்களுடைய உயர்ந்த சிந்தனையில் அவர்களுடைய முழு முயற்சியிலும் திருப்பணிகள் தொடர்ந்து சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வந்தது.
அய்யன் திருவள்ளுவர் 2044 ஆம் ஆண்டு துலைத் திங்கள் ஐப்பசி மாதம் 24 ஆம் நாள் 10.11.2013 ஞாயிற்றுக்கிழமை அரும்பனூரில் அமையப்பெற்ற மதுரையம்பதி கிளை தியான அரங்கத்தில் சங்கர சுவாமிகள் அருளாலயத்தில் ஞானவள்ளல் மகாகனம் அய்யா தங்க சுவாமிகள் அவர்கள் தலைமையில் அன்னகொடி ஏற்றி, மதுரை ஞான சபை கிளை தியான மண்டப திறப்பு விழா சீரோடும் சிறப்போடும் முப்பெரும் விழாவாக தொடங்கப்பட்டு குருநாதருடைய அகவை 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும் அத்வைத ஆனந்த சுகமே அனுபூதி வாழ்வினை அருளும் மற்றும் உயிர்கள் உய்வடைய அருளாசான் அருளும் அத்வைத ஆனந்தமே ஏகன் என்றாலும் அனேகன் என்றாலும் வலி இதுதான் என்ற நூல்கள் வெளியிட்டு விழாவும் மதுரைஅரும்பனூர் பாண்டியன் நகரில் அமையப்பெற்ற தியான அரங்கத்தில் சீரோடும் சிறப்போடும் முப்பெரும் விழாவாக அனைத்து அன்பர்கள் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் அனைவர் வருகையிலும் சீரோடும் சிறப்போடும் தியானம்,சமாராதனை,ஆசீர்வாதம்,அன்னதானம் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் சங்கர சுவாமிகளுடைய மகம் நட்சத்திர உடுக்கல் பூசை தியானம் சமாராதனை சத்சங்கம் கூட்டுப் பிரார்த்தனை அன்னதானம் எல்லாம் ஒவ்வொரு மாதமும் தலைமையின் வழிநடத்துதலின் படி நடைபெற்று வருகிறது
இந்த மகம் நட்சத்திர உடுக்கல்பூஜை அன்று பெண்கள் குழந்தைகள் எல்லோரும் எண் கோணத்தில் சென்று அமர்ந்து 11 முதல் 12 மணி வரை அவர்கள் தியானத்தில் ஈடுபட்டு தகுதியுள்ள 40 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு ! கனம்பொருந்திய கீதா அக்கா அவர்கள் குருநாதருடைய அருளாசியால் தீட்சை வழங்கி அவர்களுக்கும் குண்டலினி ஞான திருவடி தீட்சையில் அந்த புள்ளி கல்வியை பேரின்ப பெருநிலை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் குருநாதர் தந்த இந்த மெய்க்கல்வியை இந்த புள்ளி கல்வியை இந்த அனுபூதியை திறன் பட செய்து ஆன்மாவை அறிந்து உணர்ந்து அதையே பூஜித்தால் நாமும் பரமான்மாவை அடையலாம் என்ற அந்த மேலான உயரிய,உண்ணத தத்துவத்தை திறன் படஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அந்த மகம் நட்சத்திரத்தில் ஒன்றுகூடி தியானித்து வேண்டிக்கொள்வோம்.
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பதினொன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஞானசபையினுடைய மதுரையம்பதி ஆண்டுவிழா சீரோடும், சிறப்போடும் அத்தனை ஞான சபை அன்பர்களையும் அழைத்து ஒன்றுகூடி காலை அன்னகொடியேற்றி ஞான வள்ளல் மகாகனம் அய்யா தங்க சுவாமிகள் அவர்கள் தலைமையில் ஞானசபையின்பொருளாளர் கனம்பொருந்திய பாண்டியண்ணன் அவர்களுடைய முன்னிலையில் ஞானசபை துணைத்தலைவர் அறவாழிஅவர்கள் முன்னிலையில் ஞானசபையின் செயலாளர்கள் அய்யன்பாண்டியன் அவர்களுடைய முன்னிலையில் மற்றும் அனைத்து தலைவர்களுடைய வருகையிலும் அன்பர்கள் அவர்களுடைய வருகையிலும் பெண்கள் அவர்களுடைய வருகையிலும் விவசாய பெருமக்கள் அவர்களுடைய வருகையிலும் தியானம் திருக்கூட்டம் சமாராதனை,நான் கண்ட குருநாதர் சத்சங்கம் காலையில் 10:00 மணிக்கு தொடங்கி மதியம் மூன்று மணி வரை சிறப்பாக நடைபெறும். அதில் நான்கண்ட குருநாதர் சத்சங்கத்தில் அனைவரும்!தாங்கள் பெற்றஅனுபவங்களை எல்லாம் பகிர்ந்து மெய்சிலிர்க்கக்கூடிய அந்த அருமையான நிகழ்வினை நாம் எல்லோரும் ஒன்று கூடி ஆனந்தப்பட்டு காலையும் மதியமும் அறுசுவை உணவு பரிமாறி எல்லோரும் சமத்துவம் சகோதரத்துவம்என மகிழ்வினை அடைந்திடுவோம்.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை மதுரை அரும்பனூர் - நிகழ்வுகள்

  • தினசரி அதிகாலை தியானம் காலை 5.00 மணிக்கும் மற்றும் இரவு 7.00 மணிக்கு சத்சங்கம் குருவின் திருவருளோடு நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு மாதமும் அய்யன்பட்டி இராஜரி´ சங்கரசுவாமிகளின் ஒடுக்கம் பெற்ற மகம் நட்சத்திரத்தில் பூசை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி மற்றும் அமாவாசை திருக்கூட்டம் இரவு 10.00 மணிக்கு நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு திருக்கூட்டம் மற்றும் சமாராதனையும் நடைபெற்று வருகின்றது.
  • பெண்களுக்கான தியானம் வியாழக்கிழமை தோறும் மாலை 4.00 மணி அளவில் நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறுதோறும் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றம் திருக்கூட்டம் நடந்து வருகின்றது.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை மதுரை அரும்பனூர் - புகைப்படங்கள்

தொடர்புக்கு

தியான மண்டபம் - முகவரி

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை கிளை – மதுரை தியான மண்டபம், 12,பாண்டியன் நகர், அரும்பனூர்,
மதுரை – 625104