திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றம்

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபையின் சார்பாக பொதுமக்களுக்கு தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் திருக்குறளின் கருத்து செறிவை அனைவரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் மற்றும் திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆழமான ஆன்மீக கருத்துக்களை ஆய்வு செய்யும் வகையிலும் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறு அன்று அனைத்து ஞான சபை கிளைகளிலும் பொதுமக்கள்,தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது.

இந்த செம்பொருள் ஆய்வு மன்றத்தில் சிறப்பான ஆய்வுகளை செய்யும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவப் படுத்தப்படுவதுடன், பரிசுகளும் வழங்கி உற்சாகப்படுத்தப்படுகின்றனர். குருநாதர் ஞானவள்ளல் மகா கணம் தங்க சுவாமிகள் அவர்களின் தனியாத தமிழ் ஆர்வம் மற்றும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் பால் கொண்ட அதீத அன்பாலும் அனைவரும் சிந்தித்து மெய்ப்பொருளை உணர வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் முயற்சியால் இந்நிகழ்வு துவங்கப்பட்டு அருளாளர்களின் முயற்சியாலும் குருநாதரின் ஆசியுடனும், தொடர்ந்து அனைத்து கிளைகளிலும் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள், குழந்தைகள், தமிழ் ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் அனுமதி இலவசம்.