"புகுமுன் தெரிமின்"
நூல் விவரம்
நூல் பெயர்: புகுமுன் தெரிமின்
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : அய்யன் திருவள்ளுவர் 2055-ம் ஆண்டு துலைத் திங்கள் (ஐப்பசி மாதம்) 17-ம் நாள் (03.11.2024) ஞாயிற்றுக்கிழமை
வெளியிடப்பட்ட இடம்: ஞானசபை தலைமையகம் சிவத்தையாபுரத்தில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 86 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை
பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071
புகுமுன் தெரிமின்
இந்த நூல் ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் ஆய்ந்து அருளிய நூல்களின் புகுமின்-தெரிமின் தொகுப்பாகும். ஒரு சித்தாந்த நூலின் மொத்த சாராம்சத்தையும் அதன் மொத்தக் கருத்துக்களையும் அந்நூலின் பாயிரம் என்றோ புகுமுன் தெரிமின் என்றோ சுருக்கமாக இரத்தினச் சுருக்கமாக நூலின் ஆரம்பித்திலேயே இயற்றியிருப்பார்கள் , எப்படி 1330 குறளுக்கான கருத்துக்களும் பாயிரம் ஆகிய முதல் 40 திருக்குறளில் 4 அதிகாரங்களில் கூறியிருப்பாரோ, அதுபோல , அப்படியாக நம் குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் அவர்கள் ஆய்ந்து அருளிய ஒவ்வொரு நூல்களிலுமே நமது குருநாதர் 50 வருடங்களுக்கும் மேலாக இந்த ஞானக்கல்வியிலே செய்த ஆராய்ச்சியும் அதனால் கண்ட அனுபவத்தின் தொகுப்பாகும். அப்படி அவர்கள் அருளிய
1 )உலகம் உய்வடைய அன்றும் இன்றும் என்றும் ஞானமே
2 ) வள்ளுவரின் ஆழ்த்த அகன்ற உயர்ந்த உள்ளம்
3 ) The Extensive Profound and Noble Thoughts of Valluvar
4 ) அவ்வையார் அருளிய அகவலின் ஆழம்
5 ) உள்ளத்தை அள்ளும் ஆனந்தக் களிப்பு
6 ) கைவல்லிய நவநீதம் மூலமும் உரையும்
7 ) அறிந்தோர் உணர்வர் உணர்வோர் அறிவர்
8 ) ஆனந்தக் களிப்போ சச்சிதானந்தமோ அத்துவைதானந்தமோ இவை எல்லாமே அகத்தேடலில் மட்டுமே
9 ) அனுபவங்களின் தொகுப்பே மறைகளில் மறைந்துள்ள மறை பொருளாகும்
10 ) கைவல்லிய நவநீதம் (நன்னிலம் தாண்டவராய் சுவாமிகள் அருளியது) பிரித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
11 ) Kaivalaya Navaneetham (Origin and Simplied Text )
12 ) நான் கண்ட குருநாதர் (அருளாளரின் அனுபவ உரை)
13 ) மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்றும் மென்காற்றில் வரும் சுகமும்
14 ) உயிர்கள் உய்வடைய அருளாசான் அருளும் அத்துவைத்தானந்தமே ஏகன் என்றாலும் அநேகன் என்றாலும் வழி இதுதானே
ஆகிய பதினான்கு நூட்களுக்கான மொத்த அத்துவைத கருத்துக்களையும் அனுபவத் தொகுப்பையும் ஒரே நூலில் உள்ளடக்கியுள்ளது. அத்தகைய தனித்துவமும் குண்டலினி ஞானக் கல்வியை கசடற கற்பதற்கு நம் குருநாதரின் அருள் நிறைந்த இந்நூல் உலக உயிர்கள் உய்வடைய அருளிதந்த அற்புத படைப்பென்றால் மிகையாகாது.