"குருவோடு ஒரு பயணம் பாகம் - 2"

நூல் விவரம்

நூல் பெயர்: குருவோடு ஒரு பயணம் (தொடர்ந்து தொடரும்) –
பாகம் 3

ஆசிரியர்: ரா. ராஜ் நாராயணன் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபை கிளை – கூட்டாம்புளி
முதல் பதிப்பாண்டு : 2025
பக்கம்: 288
உரிமை : ஆசிரியர்
முகவரி : நெ. 7/43, சாமி கோயில் தெரு, கூட்டாம்புளி, புதுக்கோட்டை அஞ்சல் தூத்துக்குடி மாவட்டம் – 628103
தொலை பேசி எண் : 7708861877
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை
பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071 | 7708861877
அச்சுப் பணி & வடிவமைப்பு :
ஓம்சக்தி ஆப்செட் பிரிண்டர்ஸ் மேல்மருவத்தூர்

முகவுரை

      உலகில் ஆறறிவு படைத்த மானிடர்களால் பேசப்படும் மொழிகளில் மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி என்பது யாவரும் அறிந்த உண்மையே. மனிதன் தனது உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்திடும் கருவியாக மொழிகள் உருவானது என்பது பொதுவான கருத்து. ஆனால் தமிழர்களால் பேசப்படுகின்ற தமிழ் மொழியானது கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான கருவியாக மட்டுமில்லாமல் மனிதன் தனது அறிவாற்றலை முழுமையாக பயன்படுத்தி மானிடப் பிறப்பின் இலக்கான வீடுபேறு (மீண்டும் பிறவா நிலை) அடைந்து, பரம்பொருளோடு ஐக்கியமாவதற்கு ஏதுவாக தோன்றிய மொழியாக தமிழ் மொழி உள்ளது.மெய் என்று அழைக்கப்படுவது பஞ்சபூத சேர்க்கையினால் உருவான தூல சரீரம். அந்த சரீரம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ளது உயிர். உயிரோடும் மெய்யோடும் தொடர்புள்ளவை என்பதால் தமிழ் மொழியில் உயிரெழுத்துக்கள் என்றும் மெய்யெழுத்துக்கள் என்றும் உயிர் மெய் எழுத்துக்கள் என்றும் படைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஏனைய மொழிகளில் இல்லாத ஒரு சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. அதுதான் ஆயுத எழுத்து. ஆயுத எழுத்தின் பொருளை உணர்ந்து அதன் முழு பலனையும் அனுபவமாக அடைந்தால் அன்றோ தமிழ் மொழியின் அருமை பெருமைகளை உணர முடியும்.
      மெய்யெழுத்துக்கள் யாவும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று பிரிவுகளாக உள்ளது. தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உடலின் எந்த உறுப்பின் வழியாக உச்சரிக்கப்படுகின்றது என்பதை ஆராய்ந்து வன்மையான ஓசை கொண்ட எழுத்துக்களை வல்லினம்

 

10

என்றும், மென்மையான ஓசை கொண்ட எழுத்துக்களை மெல்லினம் என்றும், வன்மை மற்றும் மென்மை இரண்டிற்கும் இடைப்பட்ட எழுத்துக்களை இடையினம் என்றும் வகைப்படுத்தினர். இலக்கிய வளமும், இலக்கண மணமும் நிறைந்தது தமிழ் மொழி. இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் பரிணமித்த தமிழ் மொழியானது தலை, இடை, கடை என்ற மூன்று சங்கங்களால் போற்றி வளர்க்கப்பட்டது. தமிழ் மொழி உலகின் மிகவும் தொன்மையான மொழி என்பதாலும், தனித்துவமான மொழி என்பதாலும், பண்பாடும், பாரம்பரியமும் மிக்க மொழி என்பதாலும், இலக்கிய சிந்தனைகள் கொண்ட மொழி என்பதாலும், இலக்கண கட்டமைப்பு கொண்ட மொழி என்பதாலும், தனித்தன்மை வாய்ந்த மொழி என்பதாலும், உயர்ந்த கோட்பாடுகள் கொண்ட மொழி என்பதாலும், மரபு சார்ந்த மொழி என்பதாலும், தமிழகம் மட்டுமின்றி ஏனைய அண்டை நாடுகளில் பேசப்படுகின்ற மொழியாக இருப்பதாலும் தமிழ் மொழி செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. வாழ்வினை அகம் என்றும் புறம் என்றும் இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளதை சங்க கால தமிழ் இலக்கியங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் வழக்கத்தில் உள்ளன. அவற்றுள் எழுதவும் பேசவும் பயன்படுவது ஒரு சில மொழிகளே. தமிழ் மொழியானது பேசும் மொழியாக மட்டுமல்லாமல் எழுத்தளவிலும் சிறந்த மொழியாக விளங்குகின்றது. தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்கள் ஆன்மீக குறியீடுகளை உள்ளடக்கியது.
             தொல்காப்பியம் என்ற தொன்மையான தமிழ் நூலானது எழுத்து, சொல், மற்றும் பொருள் ஆகிய மூன்று அதிகாரங்கள் மூலமாக தமிழ் எழுத்துக்களின் வடிவம், ஒலி, ஆகியவற்றையும், எழுத்துக்கள் உடலில் எந்தெந்த

11

       பாகங்களில் எவ்வாறு தோன்றுகிறது என்பதையும், ஒவ்வொரு எழுத்துக்களின் பொருளையும் இலக்கணமாக தொகுத்து வழங்கி உள்ளது தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமையாகும்.

      அய்யன் திருவள்ளுவரால் தமிழ் மொழியில் இயற்றப்பட்ட உலக பொதுமறையாம் திருக்குறள் என்ற இலக்கிய நூலானது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கி வாழ்வியல் நெறிகளை உலகிற்கு உணர்த்தி, தமிழ் மொழியின் சிறப்பை பறைசாற்றுகின்றது.

      சங்க இலக்கிய நூல்களும், சங்க காலப் புலவர்களின் பாடல்களும், ஐம்பெரும் காப்பியங்களும், சமயம் சார்ந்த பன்னிரு திருமுறைகளும், தமிழகத்தில் தோன்றிய ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்களின் ஆய்வு நூல்களும், இறை அனுபவத்தை முழுமையாகப் பெற்று உலக மக்களை நல்வழிப்படுத்தி உயர் ஞான அனுபவத்தை பெற்றிட வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருந்து, மானிடர்களின் பிறவிப் பிணியை நீக்கி மீண்டும் பிறவா நிலையை அடைந்திடவும், பவக்கடலைக் கடந்து சென்று இறைவனின் பாதார விந்தத்தை அடைந்திட உபதேசங்கள் அருளி, ஆதி என்ற இறைவனுக்கு சமமான ஜீவசமாதி நிலை அடைந்து அருள் பாலிக்கின்ற தமிழகத்தின் ஞானிகள் இயற்றிய நூல்களும், ஆழ்ந்த ஆன்மீக அறிவும், முழுமுதற் கடவுளை உணர்வதில் உயர்நிலையும், முத்தியும் சித்தியும் பெற்று, மரணத்தை வென்று, சாகா கல்வியை தந்த பதினெண் சித்தர்கள் தமிழில் இயற்றிய பாடல்களும், சித்த மருத்துவ குறிப்புகள் போன்றவை தமிழ் மொழிக்கு உரிய சிறப்பு என்றால் அது மிகையாகாது
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றும் “செந்தமிழ்

 

 

12

நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்றும் முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியாரும், “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்” என்று பாவேந்தர் பாரதிதாசனும் பாடியிருப்பதை நினைத்தால் தமிழ் மொழியின் மீது அவர்கள் கொண்ட பற்றை எண்ணிப் பார்க்க முடிகிறது.
    கிறிஸ்தவ பாதிரியாராக தமிழகத்திற்கு வருகை தந்து, தமிழ் மொழியை ஆய்வு செய்து, தமிழை நேசித்து, தமிழ் மொழிக்கும் தமிழக மக்களுக்கும் தொண்டு செய்த அறிஞர் ஜி யு போப் அவர்கள் தனது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகின்றான்” என்று எழுத விரும்பியதை எண்ணிப் பார்த்தால் தமிழ் மொழியின் ஆற்றலையும் புரிந்து கொள்ள முடிகிறது.
        தென் தமிழகத்தில் திருச்சீரலை வாயில் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், பொங்கும் அலைகள் கொண்ட எழில் மிகு வங்கக் கடல் அருகே ஜீவ சமாதி ஆலயம் பெற்று, தனது அருட்கதிர்வீச்சால் அனைவரையும் காத்தருளும் ராஜரிஷி பரம ஞான குருபிரான் அய்யன் பட்டி அருள்மிகு சங்கர சுவாமிகளின் குரு வழி பரம்பரை தோன்றல், ஆன்மீக அடலேறு, என் சுவாசத்தோடு கலந்த எனதருமை குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் தங்க சுவாமிகள் அவர்கள் தமிழ் மொழியில் அருளிய நூல்களும் அரிய நூல்கள் என்று உறுதிபட கூறலாம். தமிழை நேசித்ததோடு மட்டுமல்லாமல் சுவாசித்து வாழ்ந்தவர் எனது குருநாதர். தமிழ் மொழியில் உள்ள ஆன்மீக இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ள உவமைகளை நுட்பமாக ஆய்வு செய்து அவற்றை தனது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். ஆன்மீக கல்வி என்றாலே அறிவுத்திறன் மிக்கவர்கள் தான் படித்து பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்

13

பல நூல்களும் பாடல்களும் இயற்றப்பட்டன. ஆசானின் நேர்முகத் துணையோடு ஆன்மீக கல்வி பயில வேண்டும் என்ற எண்ணத்தில் பரிபாஷைகளால் எழுதப்பட்டது. ஆனால் எமது குருநாதர் யாவர்க்கும் எளிதில் புரியும் வண்ணம் ஆன்மீக நூல்களில் உள்ளவற்றை தமக்கே உரிய பாணியில் உவமைகளோடு உரை எழுதி வைத்துள்ளார்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் எல்லோர் வீட்டிலும் புழக்கத்தில் இருப்பது போல எளியவரும் தெரிந்து, தெளிந்து, உணர்ந்து கொள்ளும் வண்ணம் தமிழ் மொழியில், தமிழர் நலனுக்காக தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம், கைவல்லிய நவநீதம், விவேக சிந்தாமணி, நிஷ்டானுபூதி சாரம், ஒழிவிலொடுக்கம் சித்தர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், வள்ளலார் சுவாமிகளின் அருட்பா, அவ்வையார் மட்டும் சங்க கால புலவர்களின் பாடல்கள், பரிசுத்த வேதாகமம் மற்றும் ஏராளமான நூல்களில் உள்ள ஆன்மீக கருத்துக்களை உள்ளத்தைக் கவரும் உவமைகளோடு தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நூல்களாக படைத்துள்ளார்கள். குறிப்பிட்ட கருத்தினை உவமைகள் மூலம் வெளிப்படுத்தினால் அவைகள் என்றென்றும் நினைவில் நிற்கும் என்ற நோக்கத்தில் உவமைகளை சக்தி வாய்ந்த கருவிகளாக பயன்படுத்தினார்கள். உவமைகளின் தலையாய நோக்கம் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கற்பிப்பது. உவமைகள் மூலம் விளக்கப்படும் கருத்தானது மனிதனின் அறிவுத்திறனை மேம்படுத்தும், சிந்தனை வளர்ச்சியை தூண்டும் என்பது அறிஞர்களின் நம்பிக்கை. பெரும்பாலான ஆன்மீக போதனைகள் உவமைகளை உள்ளடக்கியது என்பதுதான் உண்மை. தமிழ் இலக்கியங்களில் அங்கமாக திகழும் மதச்சார்பற்ற உவமைகள் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையட்டும் என்ற உயர்ந்த

13

நோக்கத்தில் எமது குருநாதரின் கட்டளையை ஏற்று “குருவோடு ஒரு பயணம் (தொடர்ந்து தொடரும்)” என்ற தலைப்பில் இந்த நூலை தொகுத்து வழங்கியுள்ளேன். அருளாசானின் எழுத்துக்கள்தான் வருங்கால சந்ததிகள் திருட முடியாத சொத்து என்பார்கள். எமது குருநாதர் ஆய்ந்து அருளிய நூல்களில் இருந்து உவமைகளோடு கூடிய பாடல்களையும், கருத்துக்களையும், அவ்வப்போது குருநாதர் உவமைகளோடு அருளிய ஆன்மீக அருளுரைகளில் இருந்தும் எம்மால் இயன்ற அளவு இந்த நூலில் பதிவு செய்துள்ளேன். தாயில்லாமல் சேய் இல்லை, கடல் இல்லாமல் அலைகள் இல்லை, மேகங்கள் இல்லாமல் மழை இல்லை, உயிர்கள் இல்லாமல் உடல் இல்லை, குரு இல்லாமல் சீடன் இல்லை. கல்வியில் அடியேன் பாமரன் தான் ஆனால் பட்டறிவில் எம்மை பண்புள்ளவனாக ஆக்கியது குருவின் கருணையே. எமது குருநாதரின் சிறந்த படைப்புகள் அடங்கிய கருவூலத்திலிருந்து சில கருத்துக்களை இங்கு பதிவு செய்கின்றேன். குருநாதர் தமிழ் மொழியின் மீது கொண்ட மாறாத பற்றும், மொழி உணர்வும், இன உணர்வும் எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.குருவோடு ஒரு பயணம் மற்றும் குருவோடு ஒரு பயணம் (தொடரும்) என்ற எமது முந்தைய இரண்டு நூல்களின் தொடர்ச்சியாக “குருவோடு ஒரு பயணம் (தொடர்ந்து தொடரும்)” என்ற தலைப்பில் மூன்றாவது படைப்பாக உருவாகிட அருளாசி வழங்கிய எனது குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் தங்க சுவாமிகள் அவர்களின் வாழ்க்கை குறிப்பினையும், தமிழ் மொழியின் சிறப்பினை பற்றி அவர்கள் எழுதிய கருத்தினையும் இதில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
          இந்திய திருநாட்டின் முக்கிய அங்கமாம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள, கடல் வணிகத்திற்கும்

14

முத்து குளிப்புக்கும் பெயர் போன தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில், தமிழ் தொண்டர் ஜி.யு.போப் அவர்கள் குடியேறிய சாயர்புரம் அருகில் புளியங்காடு என்று அழைக்கப்பட்ட புளியநகர் எனும் சிற்றூரில் வீ.முத்து மாலை-அன்னக்கிளி அம்மாள் தம்பதிக்கு 1939 ஆம் ஆண்டு தை மாதம் 20ஆம் நாள் பூரம் உடுக்களில் மூத்த மகவாக எமது குருநாதர் பிறந்தார்கள். உருவமற்ற நீரானது பனிக்கட்டியாக உறையும்போது உருவம் கொள்வதைப் போல், அருவமான பிரம்மம் இறைப்பணி செய்வதற்கு உருவம் கொண்டு உதித்தது போல் எமது குருநாதர் தோன்றினார்கள். பள்ளிப் பருவத்தின் போதே பகுத்தறிவு சிந்தனை கொண்டவராக இருந்தார்கள். பள்ளிக் கல்வியையும் தொழிற்கல்வியையும் முடித்த பின்பு 1962 ஆம் ஆண்டு நெய்வேலியில் அமைந்துள்ள NLC நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்கள். 1964 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் அருகில் உள்ள மாவடிப்பண்ணை என்ற ஊரை சேர்ந்த பண்டாரம் சிவகாமி அம்மாள் தம்பதியின் தவப்புதல்வி சண்முகக் கனி அம்மாளை திருமணம் செய்து கொண்டார்கள். அவ்வப்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகள் கழித்து பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு சொந்த ஊர் திரும்பினார்கள். எமது குருநாதருக்கு மூன்று புதல்விகளும் ஒரு புதல்வனும் பிறந்தார்கள். எமது குருநாதரின் பகுத்தறிவுத் திறனையும் தீவிர ஆன்மீகத் தேடலையும் நன்கு உணர்ந்த ஆன்மீகப் பெரியார் என்று அழைக்கப்படும் தாடிக்கார பெருமாள் நாடார் அவர்களின் உதவியால் 1972 ஆம் ஆண்டு சிவகளை ஆதித்தன் பிள்ளை சுவாமிகளிடம் திருவடி உபதேசம் பெற்று தீவிர தர வைராக்கியத்தோடு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்கள். பகற்பொழுதில் தனது இல்லறக் கடமைகளை நிறைவேற்றிய பின்பு இரவு

13

முழுதையும் ஆன்மீக தவ சாதனை செய்து பழகினார்கள். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உவப்பில்லா ஆனந்தத்தை அனுபவமாக அடைந்தார்கள். தமது குருநாதரிடம் பரிபூரணமாக சரணடைந்து, குருவின் வழிகாட்டுதலின்படி பயிற்சிகளை சிரத்தையோடு செய்து பரிபூரண நிலையை அடைந்தார்கள். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆன்மீகத் தேடல் உள்ள அன்பர்களுக்கு ஜாதி, மத, இன, மொழி வேறுபாடு பாராமல் இலவசமாக ஞானக் கல்வியை போதிக்கத் தொடங்கினார்கள். இளமையில் ஒரு தமிழாசிரியராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எமது குருநாதர் தனது பகுத்தறிவு திறனால் ஆன்மீக கல்வியின் மீது ஈர்க்கப்பட்டு இன்று அனைவராலும் போற்றி வணங்கக் கூடிய ஒரு ஞானாசிரியராக உருவெடுத்தார்கள்.
“தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி                                                
மனம்வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து                                                                    நரை கூடிக் கிழப்பருவ மெய்தி                                            கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பலவேடிக்கை மனிதரைப் போலே                                                                  நான் வீழ்வே னென்றுநினைத்   தாயோ”
                                                                                    –  மகாகவி பாரதியார்

தனது ஆன்மீக பயணத்தில் எதிர் கொண்ட எத்தனையோ தடைகள், இன்னல்கள், அவமானங்கள் எல்லாவற்றையும் கண்டு அஞ்சாமல், துஞ்சாமல், அயராமல், மனம் தளராமல் பாடுபட்டு ஆயிரக்கணக்கான சீடர்களை உருவாக்கி வழிநடத்தினார்கள். சீடர்கள்

14

தவ சாதனை செய்வதற்காக தியான அரங்கத்தை உள்ளடக்கிய ஞான சபை கிளைகளை நிறுவினார்கள். எக்காலத்திற்கும் சீடர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதற்காக இனிய தமிழ் மொழியின் மணம் வீச சொல் மாலைகளை தொடுத்து, மெய்ஞான நூல்களாக உருவாக்கி வைத்துள்ளார்கள். குருநாதரின் நூல்களை வீட்டில் வைத்து அழகு பார்ப்பதற்காகவா வாங்கினோம்? பலாப்பழத்தை சுற்றி வரும் ஈக்கள் பலாவின் சுவை அறியுமோ? நூல்களைப் படித்து, ஐயப்பாடுகளை அகற்றி, கருத்துக்களை உள்வாங்கி அதன்படி நடந்தால் அன்றோ அத்துவைதானந்த சுகத்தை அனுபவமாக பெற முடியும். இக்காலத்தில் மெய்யும் பொய்யும் கலந்தல்லவா நூல்கள் இருக்கின்றது. மெய்யை மட்டும் தேர்வு செய்து படிக்க வேண்டும். படித்தால் மட்டும் போதுமா? படித்ததின் முழு பயனை அனுபவத்தில் அடைய வேண்டும் அல்லவா? அடைந்த அனுபவத்தில் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும் அல்லவா? இதனை குறளாசான் அய்யன் திருவள்ளுவரும் மிகவும் அழகாக குறிப்பிடுகின்றார்.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்                                                                              நிற்க அதற்குத் தக”                                 — திருக்குறள்-391
      இதோ உங்களுக்காக எமது குருநாதரின் நூல்களில் தமிழ் மொழியை பற்றி இலக்கிய ரசனையோடு எழுதிய கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.

“நம்மருமைச் செந்தமிழின்                                                                    நல்லமைப்பை ஆராய்ந்தால்                                                                  செம்மைமிகு நற்றமிழர்                                                                                   
சித்தாந்த மெய்மைகள்                                                                                        எல்லாம் பொதிந்தொளிர்தல்” 

13

யாரும் இனிதுணர்ந்து                                                                                       நல்லோராய் வாழ்வர் நயந்து”
என்ற அவ்வைப் பாட்டியின் பாட்டை ஆய்வு செய்தால் தமிழில் வேதாந்தக் கருத்துகளும் சித்தாந்தப் பெருமைகளும் விதைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்
          “கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்த தமிழ் என்ற சிறப்பைப் பெற்ற மொழி தமிழ்மொழி
              “ஃ என்றால் உடலுள்ளம் எஃகைப் போல் ஆகுமென்போம் அஃகன் அருள் சொக்கி அங்கே எக்களிப்பு அடைவோம் அமுத மொழியாம் தமிழ் மொழியோ அஃதை ஆய்த எழுத்தென்றும், அஃதே ஆய்தமும் கேடயமாகி இருந்து காத்து வருதலாலும், அஃது உதித்து ஒடுங்குவதும் இடந்தலை என்று தொல்காப்பியமும் கூறிடும் கண்டீர் என்று தமிழின் பெருமைகளை இப்படி கூறிக்கொண்டே போகலாம்.” 

14