இளமைக்காலம்
இல்லற வாழ்வு
ஆண்டுகள் சில உருண்டோடின. 1962ல் நெய்வேலி N.L.C.நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்கள். 1964ல் தூத்துக்குடி மாவட்டம் ஏரலுக்கு அருகில் உள்ள மாவடிப்பண்ணை என்ற ஊரைச் சேர்ந்த பண்டாரம் – சிவகாமி அம்மாள் தம்பதியின் தவப்புதல்வி சண்முகக்கனி அம்மாளை திருமணம் செய்து இல்லறம் புகுந்து நல்லறம் மேற்கொண்டார்கள். சுவாமிக்கு மூன்று புதல்விகளும் ஒரு புதல்வனும் பிறந்தனர். 1968ம் ஆண்டு உடல்நலக் குறைவின் காரணமாக பணியிலிருந்து
விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு நெய்வேலியிலிருந்து சொந்த ஊரான புளியநகருக்கு வந்துவிட்டார்கள்.
ஆன்மீகப் பயணம்
வாழ்வின் இலக்கு
மனிதன் வாழ்வு முழுமையடைய வேண்டுமெனில் அவன் உயிர் உடலோடு ஒடுங்கும் நிலையாகிய மரணமில்லாப் பெருநிலையைத் தரக்கூடிய குண்டலினி ஞானக்கல்வியை கற்று அறிந்து உணரவேண்டும் அப்படி உணர்ந்தால்தான் வாழ்வின் நிலைத்த சுகத்தைப் பெறமுடியும் அவ்வாறு இல்லையெனில் கல்வி, செல்வம், அதிகாரம், அந்தஸ்து என எவ்வளவு பெற்றிருந்தாலும் அவனுடைய வாழ்வானது குறையுடைய
ஒன்றாகத்தான் இருக்கும். சலிப்பு, வெறுப்பு, கோபம், காமம், பொறாமை போன்றவற்றில் சிக்கித் தவிப்பார்கள். உடலைச் சீராக்க மருத்துவர்கள் இருப்பதுபோல், மனதைச்சீராக்க மனவேதனையிலிருந்து விடுபட வேண்டுமென்றால். ஏற்கெனவே மனதை தன்வசப்படுத்திய ஞானாசான் மூலம்தான் சீராக்கமுடியும். குருவின் மூலமாகத் தெளிவு பெற்றால்தான் உயிர் உய்வடையும். வேறொன்றாலும் வாழ்வு பரிபூரணம் அடையாது என்று சித்தர்களும் ஞானிகளும் காட்டிய வழியை இக்காலத்திற்கு ஏற்றவாறு உருவாக்கி தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு உணர்த்தி வருகிறார்கள்.
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் சாயர்புரம் அருகில் உள்ள சிவத்தையாபுரம் எனும் சிற்றூரில் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையின் தலைமையகம் அமைந்துள்ளது. மேலும் சென்னை மாதனாங்குப்பம், மேடவாக்கம், மேல்மருவத்தூர், திருவாரூர், நெல்லை, மதுரை, தூத்துக்குடி, கூட்டாம்புளி, முக்காணி, திருச்செந்தூர். உமரிக்காடு, ஏரல், ஆகிய இடங்களில் கிளை ஞான சபைகள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.