உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை - நிகழ்வுகள்

WINGS நிறுவனத் தலைவர் ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் அவர்களின் 87-வது பிறந்தநாள் விழா, கூட்டாம்புளி ஞானசபை உணர்வாளர் கனம் பொருந்திய ரா.ராஜ்நாராயணன் அவர்கள் எழுதிய 'குருவோடு ஒரு பயணம் தொடர்ந்து தொடரும்' என்ற நூலின் வெளியீட்டு விழா மற்றும் கூட்டாம்புளி ஞானசபைத் திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றத்தின் 6-ம் ஆண்டு துவக்க விழா ஆகியவை நடைபெறும்.

அய்யன் திருவள்ளுவர் 2056-ம் ஆண்டு துலைத்திங்கள் (ஐப்பசி மாதம்) 30-ம் நாள் (16.11.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையின் ஆன்மிக முப்பெரும் விழா கூட்டாம்புளியில் பெருமையாக நடைபெறும்.

அய்யன் திருவள்ளுவர் 2057-ம் ஆண்டு மீனம் திங்கள் (பங்குனி மாதம்) 16-ம் நாள் (30-03-2026) திங்கட்கிழமை அன்று பரமஞான குருபிரான் ராஜரிஷி அய்யன்பட்டி சங்கரசுவாமிகளின் 84-ம் ஆண்டு குருபூசை மகம் நட்சத்திரத்தில் திருச்செந்தூரில் நடைபெறும்

ஒவ்வொரு மாதமும் அய்யன்பட்டி ராஜரிஷி சங்கரசுவாமிகளின் ஒடுக்கம் பெற்ற மகம் நட்சத்திரத்தில் பூசை மற்றும் அன்னதானம் சங்கர சுவாமிகளின் ஜீவசமாதி ஆலயத்தில் சிறப்பாக நடந்து வருகின்றது.

சங்கர சுவாமிகளின் ஜீவசமாதி ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி பூஜைகள் மற்றும் திருக்கூட்டம் இரவு 07.00 மணி முதல் நடந்து வருகின்றது.