"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்
Dr. செந்தில் அரசு MBBS, MD
நெல்லை
குருநாதரின் அன்பு வெளிப்பட்டிருந்தது. என் சகோதரி குடும்ப உறுப்பினர்கள் சுலபமாக சுகமடைந்த போது சகோதரியின் நிலைமை மட்டும் சரிவரவில்லை. அனைத்து மருந்துகளும் செலுத்தப்பட்ட பின்னும் மூச்சு திணறல் கூடிக் கொண்டே போனது. இதற்கிடையில் நான் சிவத்தையாபுரம் சென்று அய்யாவை சந்தித்து முறையாக ஆசீர்வாதமும், அருட்பிரசாதமும் பெற்றுக் கொண்டேன். அருட்பிரசாதத்தை அவளிடம் கொடுத்து பூசி வரச்சொன்னேன். மறுநாள் எனக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு தொலைபேசி வந்தது. சகோதரிக்கு மூச்சு திணறல் அதிகமாக உள்ளது படுக்க கூட முடியவில்லை என்று அழுதாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குருநாதர் மட்டுமே மாற்ற முடியும் என்று உணர்ந்தேன். குருநாதருக்கு தொலைபேசி செய்வதற்காக காலை 6 மணி வரை காத்துக் கொண்டிருந்தேன்.
பின்னாளில் Dr.பொன்ராஜ் அவர்கள் செந்தில் கடைசி நேரத்தில் உங்கள் சகோதரிக்கு எந்த மாதிரி மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள் என்று கேட்டார். அது எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம். குருநாதரின் எளிமையும், பொறுமையும் அனைவரையும் சமமாக பாவிக்கும் தன்மையும் மனதில் நீங்காத ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எமது குருநாதரின் சீடனாக இருப்பது எனக்கு கிடைத்த பெறும் பாக்கியம் என்றும் அவர் பொற்பாதங்களில் சரணாகதி அடைய வேண்டும்.