"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்

Dr. அபிலாஷ் BDS, MBA
ஓசூர்

என்னுடைய பயணம் குண்டலினி ஞானத்துடன் பதினெட்டரை ஆண்டுகள் முன்பு ஆரம்பித்தது. குருவுடன் என்னுடைய முதல் சந்திப்பு சுவாரஸ்யமானதாகும். என்னுடைய நண்பர் டாக்டர். அருண் ஸ்ரீனிவாசனும் நானும் பட்டபடிப்பின் இறுதி ஆண்டு தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் ஒரு குருவைப் பற்றி அடிக்கடி பேசுவார். சந்திப்பதாக குறிப்பிடுவார். இதை கேள்விப்பட்ட போது நான் அதைப் பற்றி எதுவும் விவரமாக கேட்கவில்லை. ஆனால் மனதில் வைத்துக் கொண்டேன். பிறகு என்னுடைய நண்பர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று விட்டார்.
என்னைப் பொறுத்த வரை நான் வியாபார இயலில் முதுநிலை படிப்பின் நுழைவுத் தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. யாராவது இந்த பிரச்சினையில் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்போது இன்னொருவரிடம் அதாவது டாக்டர். பொன்ராஜ் அவர்களிடம் பேசினேன். ஏனென்றால் அவர் வெகு காலமாக ஒரு குருநாதரிடம் சென்று வருவதாக கூறினார். நான் அவரிடம் அந்த குருவை சந்திக்க வேண்டுமென்று கூறினேன். ஏனென்றால் எனக்கு சில விசித்திரமான அனுபவங்கள் நேர்ந்து கொண்டிருந்தன. டாக்டர் என்னை குருவிடம் அழைத்துச் சென்றார். அப்போது தான் முதன் முறையாக என் 22வது வயதில் நான் என் குருவைச் சந்தித்தேன். நான் குருவைச் சந்தித்த நொடியிலேயே எனக்கு ஒரு மறுபிறவி எடுத்ததை போலிருந்தது. அதுவரை என் வாழ்க்கை ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தது. அதன்பிறகு என் வாழ்க்கை முற்றிலும் வேறு திசைக்கு மாறிவிட்டது. அது என் வாழ்க்கையில் ஒரு மறு எழுச்சியாகும். ஏனென்றால் அதற்கு முன்பு என் வாழ்க்கை ஒரு நாசத்தை நோக்கி வேகமாக போய்க்கொண்டிருந்தது.
01
அக்காலகட்டத்தில் நான் மோசமான நிலையிலிருந்து படு மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருந்தேன். வாழ்க்கையில் குறிக்கோள்கள் எதுவும் இல்லை. எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அழுத்தம் இல்லாதிருந்தது. எனக்கு எந்தப்பக்கம் போவதென்றே தெரியவில்லை. ஒரு உந்துதலும் இல்லை. நான் மின் கம்பியில் சிக்கிய காற்றாடி போல் முழுநாசத்திற்கு அருகில் நடனமாடிக்கொண்டிருப்பதைப் போல இருந்தேன். குருவை சந்தித்ததிலிருந்து என் வாழ்க்கை புதிய அர்த்தம் பெற்றது. நான் நல்ல காரியங்களையும், உயர்வான காரியங்களையும் செய்வதில் அக்கறை கொண்டேன். நான் சிறுவயதில் அவ்வப்பொழுதுதான் வேலை செய்வேன். எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வேன். நான் என்னை ஒரு பொறுப்பானவனாக கருதவில்லை, நான் எதைப்பற்றியும் கருத்தில் கொள்ளவில்லை. இவையெல்லாம் ஒரு நொடியில் குருநாதரை சந்தித்த பிறகும் குண்டலினி ஞானத்தைச் செய்கிற பொழுதும் மாறியது. குருநாதரிடம் குண்டலினி ஞானம் கற்றேன். குருநாதர் திரு. தங்கசுவாமிகளிடம் குண்டலினி பயிற்சி கற்று அதை இடைவிடாமல் செய்து புத்துணர்ச்சி பெற்றேன். குருநாதர் எனக்கு எப்போதும் குண்டலினி ஞானத்தைப் பற்றி வழிகாட்டுதல் செய்தார்.
02

நான் அடிப்படையான பயிற்சிகள் அதாவது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் செய்தேன். இதன் மூலம் ஞானத்தின் ஒரு மட்டத்திலிருந்து இன்னொரு உயர்ந்த மட்டத்திற்கு செல்ல முடிந்தது. மெல்ல குரு என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதையும் அதன் நோக்கத்தையும் உணர்ந்தேன். அதன்பிறகு நான் எந்த புத்தகத்தை படித்தாலும் அவற்றில் கூறியிருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் என்னுள் மெல்ல உறுதியாக ஏற்படும் மாற்றங்களில் விருப்பம் இருந்தது. அது ஒரு மழைத் தூறல் போன்று ஆரம்பித்து கடைசியில் ஒரு பெருமழையாக மாறியது.
சொல்லப்போனால் குருநாதர் போதனையிலிருந்து தெரிந்து கொண்டதைவிட அவரது மௌனத்திலிருந்து அறிந்து கொண்டது தான் அதிகம். அவர் என்ன சொன்னார் என்பதைவிட என்ன சொல்லவில்லை என்பதுதான் எனக்கு பெரியதாக இருந்தது. உண்மையாக கூற வேண்டுமானால் அவர் ஒருசில வரிகளே 18 ஆண்டுகளில் பேசியிருக்கிறார்கள். இன்னும் அவர் கூறியவற்றில் இப்போதும் குண்டலினி ஞானம் செய்யும்போது புதிய அர்த்தங்களை காண்கிறேன்.

03
எனக்கு பலதரப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. சில இனிமையானது, சில கேள்விகள் நிறைந்தது. இவை எல்லாவற்றையும் குருநாதர் நிதானத்துடன் சிறிய போதனைகளில் அறிவுறுத்தினார். அவர் பலதரப்பட்ட புத்தகங்களை படிக்க சொன்னார். அதனால் நான் இந்த ஞானத்தை ஒவ்வொரு நாளும் நன்றாக படித்து தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது.
இன்னொரு விசயம் எனக்கு புரிந்தது. குருநாதர் மக்களிடையே குண்டலினி ஞானத்தைப் பரப்புவதற்காக மிகப்பெரிய முயற்சியெடுத்தார் அதைப்பற்றி சற்று கீழ்கண்டவாறு கூறுகிறேன். ஆஸ்ரமம் என்பது இந்து சமயத்தில் உள்ள நான்கு வாழ்க்கை நிலைகளில் ஒன்றாகும். இது பழங்கால மற்றும் இடைப்பட்ட வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அடிப்படையாக ஆஸ்ரமம் கீழ்கண்ட நான்கு நிலைகளாகும்.
04

பிரம்மச்சரியம்:
இது மாணவர் நிலையாகும். இந்த முதலாவது நிலையில் ஒருவர் கல்வி கற்க வேண்டிய காலமாகும்.
க்ரஹச்சரியம்:
இது குடும்பத்தை நிர்வகிக்கும் நிலையாகும். இதில் ஒருவர் தன்னுடைய உத்தியோகத்தை மேம்படுத்துவார். திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கை வாழ்வார். இந்த நிலையில் எதிர்கால சந்ததியினருக்கு பொருள் சேர்த்து வைப்பார்கள்.
வானப்ரஸ்தம்:
இது பணியிலிருந்து ஓய்வு பெறும் நிலை, ஒருவர் 30 – 40 ஆண்டுகள் வேலை செய்து விட்டு எல்லா வேலை சம்பந்தப்பட்ட விசயங்களை முடித்துக் கொண்டு உடல் ரீதியாகவும் ஓய்வு பெறுவார்கள்.
சன்யாசம் :
இது பற்றுகளை துறக்கும் நிலை. இந்நிலையில் ஒருவர் எல்லா உலக பிணைப்புகளையும் விட்டு விட்டு வேதாந்தத்தையும், ஆன்மீகத்தையும் நினைத்துக் கொண்டு இறுதி வாழ்க்கையை வாழ்வார்கள்.

05

எல்லோரும், மேற்கண்ட முதல் மூன்று நிலைகளை அந்த வரிசையிலேயே வாழ்வார்கள், நான்காவது நிலையை நடைமுறை காரணங்களால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எவரும் உடல்நிலை காரணமாக சன்யாசத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாம் 80 சதவிகிதம் வாழ்க்கையை சாதாரணமாக ஏதோ வாழ்வோம் என்று வாழ்கிறோம். ஆதலால் மேற்கூறிய வாழ்க்கை முறையிலிருந்து உடனடியாக ஒரு சித்தாந்த மற்றும் ஆன்மீக வாழ்க்கையை மேற்கொள்வது எளிதான விசயமல்ல.
இன்னொரு தப்பான எண்ணம் என்னவென்றால் பிரம்மச்சரியம் என்பது உடலாலும் மனதாலும் தனித்திருப்பதாக சமூகம் கருதுகிறது. அதனால் ஆன்மீகம் என்பது கோவில்களை மற்றும் சமயம் சார்ந்த ஸ்தாபனங்களை நிர்வகிப்பவர்களையே ஆன்மீகவாதிகளாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆன்மீகம் சாதாரண மக்களுக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிட்டது. சாதாரண மக்களைப் பொறுத்தவரை ஆன்மீகம் என்பது பிரார்த்தனை செய்வதும் ஆன்மீக புத்தகங்களை படிப்பது என்பதை தவிர வேறு உயர்ந்த நிலைக்கு கடந்து செல்லவில்லை.

06

ஒட்டு மொத்த உலகத்தையும் கருத்தில் கொண்டு குருநாதர் ஆன்மீகத்தை பரப்புவதற்காக குண்டலினி ஞானத்தை எல்லோரிடமும் போதிக்க முயற்சி எடுத்தார். அவர் ஞானத்தை சுலபமான முயற்சிகளின் மூலமாக எல்லோருக்கும் ஏற்றவாறு எந்த வாழ்க்கை நிலையிலிருந்தாலும் செய்யக்கூடிய வகையில் வழிகாட்டினார்.
முக்கியமாக குரு திருமணமானவர்களுக்கு ஏற்றவாறு சாதாரண மணவாழ்க்கையை (க்ரஹச்சர்யம்) வாழ்ந்தவாறே குண்டலினி ஞானத்தை கடைப்பிடிப்பதற்கு வழிவகை செய்தார். இது நம் சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைத்த ஒரு மாபெரும் மாற்றமாகும். இது மனம் சார்ந்த மற்றும் உடல் சார்ந்த தகுதியை உடைத்தெறிந்து எல்லோருக்கும் குண்டலினி ஞானத்தின் பலன்களை அனுபவிக்க வழிவகை செய்தது.
ஒரு பள்ளிக்கூடத்தில் எல்லா வயது மாணவருக்கும் வகுப்புகள் உண்டு அதைப்போல் குருநாதர் அனைத்து மக்களும் அவர்களின் புரிந்து கொள்ளும் தன்மைக்கு ஏற்றவாறு இந்த ஞானத்தை அளித்திருக்கிறார். இது ஆன்மீகத்தில் ஒரு புரட்சியாகும். இது தவிர குருநாதர் கடினமான குண்டலினி ஞானத்தைப் பற்றிய புத்தகங்களை எளிய தமிழில் மொழி எழுதியிருக்கிறார் .

07

இது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த அணுகுமுறையினாலே தான் நான் குண்டலினி ஞானத்தை அறிந்து கொள்ள முடிந்தது. குண்டலினி ஞானத்தை திருமணமானவர்களும் பயிற்சி செய்ய குரு வழிகாட்டினார். அதனால் என்னுடைய பெற்றோர்கள் என்னை இந்த ஞானத்தில் ஈடுபட ஒப்புக்கொண்டார்கள். இல்லாவிடில் சம்மதித்திருக்க மாட்டார்கள். நான் என்றென்றும் குருநாதரின் அன்புக்கும் தயாள குணத்திற்கும் குண்டலினி ஞானத்தை அளித்ததற்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.
என் குருநாதரின் மகத்துவத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இங்கே உங்களை குண்டலினி ஞானத்தை பற்றி சிந்தித்து அதனை ஏற்று, பயிற்சி செய்து பயனடைய வேண்டுகிறேன். இந்த ஞானம் உங்களை முழுமையாக ஒரு நல்ல ஆன்மீக வழிக்கு மாற்றக்கூடியது. நான் ஞானத்தால் நேரடியாக பயனடைந்தவன். அதனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் குண்டலினி
ஞானத்தை பின்பற்ற தொடங்கினால் அது உங்கள் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய முடிவாகும். நீங்கள் இந்த முடிவை எடுத்ததற்கு அளவில்லா மகிழ்ச்சி அடைவீர்கள்.

08
குருவே சரணம்!
நன்றி !