"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்

S.ஜெயந்தி
மதுரை

ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் ஐயா அவர்கள்! குருநாதர் மட்டுமல்ல. அன்பு காட்டுவதில் அன்னை – அறிவுரை கூறுவதில் தந்தை – அல்லல் களைவதில் இறைவன் – சந்தேகங்களை களைவதில் ஞானாசிரியர். தன்னுடன் உரையாடுபவர்களின் மனதை புரிந்து கொண்டு பேசும் போது நண்பர் ஒருவரைப் பற்றிய செய்திகளை மற்றவர்களிடம் பகிராத உயிர் தோழர், எங்கள் நால்வரையும் வழிநடத்தி செல்லும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர். எங்கள் குடும்பத்தின் வளர்ச்சியை விரும்பும் நல விரும்பி, நோய்களை தீர்த்து வைக்கும் தன்வந்திரி, ஆத்மார்த்தமாக நினைக்கும் போது கனவில் தரிசனம் கொடுக்கும் பிரம்மம். மனதை சீர்படுத்தும் மனோதத்துவ நிபுணர். வந்த துயர்போக்கி அதுவும் இனிவாராது காக்க வல்ல காரணகுருநாதர். அனைத்து துறைகளை பற்றியும் சரளமாக பேசும் பேரறிவு களஞ்சியம். எந்நிலையிலும் தன்நிலை மாறாத பரிபூரணஞானி தன்னுடைய மாணவர்களை முன்னிலைப்படுத்திச் சொல்லும் ஒரே குருநாதர். தக்க சமயத்தில் வந்தருளும் அபயகர்த்தா.
விரிக்கிற் பெருகும் ஆகையால் அற்புதங்கள் ஒரு சில காண்போம். பணி செய்து கிடப்பதே என் பணி எங்களுடைய சீடர்களுக்கு மட்டுமல்ல தன்னை நாடி வருபவர்கள் அனைவருக்கும் என்று தன்னை இறைபணிக்கு முழுமையாக அர்ப்பணித்த தியாகச் செம்மல் எங்கள் குடும்ப குருநாதர்.
1. 2013-ல் எம்முடைய தோழியின் கணவருக்கு (மதுரையில்) பணி நியமனம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது. சென்னை மிகப் பெரிய ஊர், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று யாருமில்லாத இதுவரை செல்லாத புதியஊர், 2 வயது குழந்தையோடு சென்னைக்கு செல்ல துளியும் விருப்பமில்லை தனியாக மதுரையில் இருக்கவும் விருப்பமில்லை. என்ன செய்வது மாமியார் வீட்டுடன் இருக்க வேண்டியது தான் என்று மிகவும் கவலையுடன் இருந்தார்கள். நாங்க ஐயாவிடம் இவர்களைப் பற்றி தொலைபேசியில் கூறும் போது முழுமையாக, தெளிவாக எங்கள் குருநாதர் கேட்டுகொண்டு யாரென்று தெரியாத முகங்கூட பாராத அவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் மீண்டும் பணிமாற்றம் மதுரைக்கே வாங்கித் தந்தார்கள் நம் குருநாதர்.
01
2. எங்களுடைய இரண்டாவது மகனுக்கு சுமார் 4 வயது இருக்கும் போது சளி, காய்ச்சல், அதிகமான வாந்தி, வாந்தியின் காரணமாக உணவு மருந்து எதுவுமே உட்செல்லவில்லை. ஆகையால் டிரிப்ஸ் ஏற்ற வேண்டிய கட்டாயம். தெம்பும் கிடைக்கவில்லை. (மறுநாள் பொங்கல் பண்டிகை) மருத்துவர் பரிசோதிக்க வரும் போது பார்த்துவிட்டு 3 பாட்டில் ஏற்றியும் தெம்பு வரவில்லை இன்றைக்கு வீட்டுக்கு அனுப்ப முடியாது நாளைக்கும் டிரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்றுசொல்லிச் சென்று விட்டார்கள். (நாங்களும், எங்கள் வீட்டுகாரங்களும்) ஐயாவிடம் தொலைபேசியில் விவரங்களை சொன்னோம். ஐயா சொன்னாங்க நாளைக்கு வீட்டில் பொங்கல் பண்டிகையை எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். இரண்டு மணிநேரம் கழித்து மருத்துவர் மறுபடியும் பரிசோதனைக்கு வருகிறார்கள் செக் பண்ணிவிட்டு வீட்டுக்கு கூட்டிப் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். டாக்டர், செவிலியரிடம் சொன்னது எப்படி இவ்வளவு சீக்கிரம் தெம்பு கிடைத்தது என்று தெரியவில்லை. எப்பவுமே இரண்டாவது தடவை தான் ரவுண்ட் வருவேன். இன்று ஏனோ 3வது தடவை ரவுண்ட்ஸ் வந்துவிட்டேன் என்று கூறினார்கள்.
02
3.2020-ம் ஆண்டு திடீர்னு எனக்கு இடுப்பு, வயிறு பகுதியில் தாங்கமுடியாதவலி, அறிகுறி எல்லாமே சிறுநீரகக்கல் அடைப்பு சம்பந்தபட்டது. டாக்டரிம் செல்லும் போது சிறுநீரகக்கல் அடைப்புதான் மருந்து சாப்பிடுங்கள் என்று மருந்து சொல்லிவிட்டார்கள். 5 நாட்கள் சாப்பிடுங்கள் அப்புறம் ஸ்கேன் பண்ணி பார்ப்போம் என்றார்கள். குருநாதரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசயத்தை பகிர்ந்து கொண்டேன் அப்படியா சரி என்று கூறினார்கள். ஸ்கேன் பண்ணுங்கள் பார்ப்போம் ரிப்போர்ட்ல என்ன வருதுன்னு சொன்னார்கள். நான்கு நாட்கள் மருந்து சாப்பிட்டிருக்கேன் 5வது நாள் ஸ்கேன் எடுக்க வேண்டும் அன்று விடியற்காலையில் ஐயா கனவில் வந்தாங்க சுப கனவு, காட்சிகள் நிறைய, நிறைய அன்று எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டால் சிறுநீரகத்தில் கற்கள்இல்லை. நன்றாக உள்ளது என்று வந்தது இதற்கு காரணம் எங்கள் குருநாதரின் தவவலிமை அவர்களின் வல்லமையே கருணையேயாகும்.
03
2010ம் ஆண்டு எமக்கு கடுமையான வயிறுவலி, வயிற்று எரிச்சல் இருந்தது. ஒவ்வொரு நாளும் வலி வேதனை, அவஸ்தையோடு கழிந்தது. டாக்டரை பார்த்தோம் அல்சர் என்று சொன்னார்கள். மாத்திரை தந்தார்கள் சாப்பிட்டு வந்தேன் எந்த மாற்றமும் இல்லை. ஐயாவிடம் தொலைபேசியில் சொன்னேன் ஐயா முதலில் பெண் மருத்துவரை (DGO) முதலில் போய் பாருங்கள் என்று சொன்னார்கள், குருநாதரின் ஆலோசனைப்படி 2வது Endoscopyயும் டாக்டரைப் பார்த்தோம் ஸ்கேன் பண்ணினார்கள் எந்த பிரச்சினையும் இல்லை எல்லாம் சரியாக உள்ளது என்றார்கள். பாருங்கள் டாக்டர் பெயரைச் சொல்லி பரிந்துரை கடிதம் தந்தார்கள். அப்புறம் Endoscopy பார்த்தோம். அல்சர் இல்லை வாயு இருக்கு என்று தெரிந்து வாயு வெளிவருவதற்கு மாத்திரை கொடுத்தார்கள். பசிக்கவிட்டு வாயு ஆக விடாதீங்க நேரத்துக்கு சாப்பிட்டு விடுங்கள் என்று சொன்னார்கள்.
04
அந்த கால கட்டத்துல எதுக்கு உயிரோடுயிருக்கணும் என்ற எண்ணத்தை வயிறுவலி கொடுத்து விட்டது. அப்பேற்பட்ட வலியை காணாவலியாக செய்து எங்களைக் காப்பாற்றியது மெய் கொண்டு மெய்யை உணர்த்தும் மெய்ஞானி, கண்கண்ட எங்கள் கண்கள் கண்ட தெய்வம் உயிர் காவலர், ஞானப்புதையல், எங்கள் குருநாதர் தலைசிறந்த வழிகாட்டி, தலை சிறந்த குருநாதர், தலைசிறந்த தலைவர், சிறந்த ஆலோசகர்,
1. A genuine leader is not a searcher for consensus but a molder of consensus
2. A real leader has the capacity to translate vision in to reality
05
ஆன்மாக்களை புனிதப்படுத்தும் புண்ணியர் சாதியை கடந்த சத்தியவான், மதங்களை கடந்த மகான், தர்ம வழியில் நடக்கும் ஞானதாயின் தலைமகன், மன்னிக்கும் மனம் படைத்த தயாபரன் எங்கள் குருநாதர். கைவல்லய நவநீதமும் சொல்வாங்க, விவிலிய வேதாகமும் பேசுவாங்க. மறைகளை பற்றியும் மேற்கோள்காட்டி புரிய வைப்பாங்க. ஞானிகள், வள்ளலார், தாயுமானசுவாமிகள், ரமண மகரிஷி பற்றியும் சொல்வாங்க, முகமதுநபிகள் பற்றியும் சொல்வாங்க, புத்தர், சித்தர்கள், திருவள்ளுவர், பெண் ஞானிகளான ஒளவைபாட்டி, காரைக்கால் அம்மையார் என்று மற்ற ஞானிகளின் பெருமையை பறை சாற்றும் தமிழ் மொழி மீது தீராத பற்றும் தணியாத ஆர்வமும் கொண்ட இறைமொழி வேந்தர், தலைசிறந்த தலைவர்.
06

இந்துக்களுக்கு பகவத்கீதை, கிறிஸ்தவர்களுக்கு பைபிள். முகமதியர்களுக்கு திருகுர்ஆன் என நினைத்தோம். ஆனால் ஆன்மாவிற்கு சாதி ஏது? மொழி ஏது? இனம் ஏது? மதம் ஏது என்று உணர்த்தியது எங்கள் குருநாதர்தான். படித்தவர், படியாதவர், பணக்காரர், ஏழை, சாதி, மதம், மொழி, இனம், எந்த பாகுபாடும் இல்லாத நடுநிலையானவரே எங்கள் குருநாதர்,
சிந்தையை அவனிடத்தில் கொடுத்துவிடு அதுதான் வழி.
– பகவத்கீதை.
மகனே! மகளே உன் உள்ளத்தை தா. – பைபிள்
இறைவன் உடம்பை நோக்க மாட்டான் உள்ளத்தையே நோக்குவான்.
– திருகுர்ஆன்
என்று சமய நூல்களின் வழி நின்று உடமையை கொடுத்து என்னை ஏமாற்றாதே என்று வாழும் தூயவரே சதாசிவமே நான் கண்ட குருநாதர். இவர்களே எங்கள் குடும்ப குருநாதர்.

07
ஆம் யாமும் எனது கணவர் (மதுரை சீனிவாசன்) பெரிய மகன் ( யோகேஷ் B.E, EEE) இளையவர் (கார்த்திக் B.Pharm., இரண்டாம் ஆண்டு) நாங்கள் அனைவரும் எம் குருநாதரின் அருட் செல்வங்களே. எம் குருநாதரின் ஒரே நோக்கம் தேகத்திற்குள்ளிருக்கும் தேகியை (ஆன்மா) உணர்த்துவது உய்வடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது அவர்கள் மூலமாக பூமிபந்தில் வாழ்பவர்களுக்கு நன்மைகள் அதிகமாக கிடைக்கும் என்பதே. இவர்களே நான் கண்ட குருநாதர். தங்களுடைய குடும்பத்திற்கு மட்டும் கடமை ஆற்ற வேண்டிய தங்கள் தங்கத்தை பெயருக்கேற்றவாறு (தங்க சுவாமிகள்) இறை தொண்டு ஆற்றுவதற்கு முழுமையாக அர்ப்பணித்த அம்மா (குருநாதரின் வாழ்க்கை துணைவியார்) அவர்களை பணிவுடன் வணங்கி நன்றிகளை எங்கள் குடும்பத்தினர் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். எம் குருநாதரையும், எம் குருநாதரை தன்மடியில் ஏந்திய புண்ணிய மண் புளியநகரையும், சீர்மிகு சிவத்தையாபுரம் பேரருள் மிகு பேராற்றல் களமான சிவத்தையாபுர தியான மண்டபத்தையும் வணங்கி நிறைவு செய்கிறேன்.
08
படித்தமைக்கு நன்றி !