உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை - மேல்மருவத்தூர் கிளை



தோற்றமும் வளர்ச்சியும்
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடித்தற்றுத் தான்முந் துறும் – குறள் எண் : 1023
மேற்கூறிய வள்ளுவரின் குறளுக்கு இணங்க இவ்வுலகம் உய்வடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் எமது குருநாதரும் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையின் நிறுவனர் தலைவருமான ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் உருவாக்கிய மேல்மருவத்தூர் ஞான சபை கிளையின் தோற்றம் மற்றும் வளர்ச்சிகளைஇங்கு பதிவு செய்வதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.2011 ஆம் ஆண்டுகுருநாதரிடம் குண்டலினி ஞான திருவடி தீட்சை பெற்ற பிறகு, தனி ஒருவனாக மேல்மருவத்தூர் அருகிலுள்ள கிராமத்தில் உள்ள எனது இல்லத்தில்தியானப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன்.இன்னும் சில அன்பர்கள் பயிற்சியில் இணைந்து கொண்டால் நல்ல வளர்ச்சி இருக்கும்என்ற குருநாதரின் அறிவுரைப்படி எம்மால் இயன்ற அளவு இந்த ஞானக் கல்வியைபற்றி எம்மை சந்திப்பவர்களி டம் கூறி வந்தேன்.2013 ஆம் ஆண்டு இறுதியில் மேல்மருவத்தூரில் கனம் பொருந்திய ரகுபதி அவர்களைசந்தித்தேன். அவர் பல வருடங்களாக இப்படிப்பட்ட கல்வியை தேடி வந்ததாக என்னிடம் கூறினார்கள்.03.01.2014 அன்று கனம் பொருந்திய ரகுபதி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் ஆக மூவரையும் தலைமையகமான சீர்மிகு சிவத்தையாபுரத்தில் குருநாதரிடம் அறிமுகம்
செய்து வைத்தேன் .சிறிது நேர உரையாடலுக்குப் பின் குருநாதனின் குண்டலினி ஞான திருவடி தீட்சை மூவருக்கும் அருளப்பட்டது.
அன்றைய தினத்தில் சென்னையில் தையற் கலைஞராக பணி புரியும் D. கண்ணன் அவர்களுக்கு திருவடி தீட்சை அருளப்பட்டது . நாங்கள் அனைவரும் ராஜரிஷி பரம ஞான குருபிரான் சங்கர சுவாமிகளின் குருபூசை விழா, குருநாதரின் பிறந்தநாள் விழா, ஞான சபை கிளை தியான அரங்க, திறப்பு விழா மற்றும் ஆண்டு விழா என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று ஞானசானிடம் அருளாசி பெற்று வருவோம். 2018 ஆம் ஆண்டு குருபூசை அழைப்பிதழ்களை வழங்க குருநாதர் சென்னை வரும்போது மேல்மருவத்தூரில் உள்ள அன்பர்களே ரகுபதி அவர்களின் இல்லத்தில் வைத்து சந்தித்து குருபூசை அழைப்பிதழ்களை வழங்கி ஆசி வழங்கியதோடு மட்டுமின்றி, அன்றைய தினம் வந்திருந்த அனைத்து மகளிர்க்கும் ஞான சபையின் தலைமை பொருளாளர் கனம் பொருந்திய பாண்டியன் அண்ணாச்சி மூலம் திருவடி தீட்சை அருளப்பட்டது. பின்னர் அனைவரும் தியான பயிற்சியை மேற்கொள்ள ஒரு தியான அரங்கம் தேவை என்று கோரிக்கை வைத்து சமாராதனையில் வேண்டிக் கொள்வோம்








அன்றைய நிலவரப்படி கோரிக்கை நிறைவேற மிகுந்த நிதி தேவைப்பட்டது. பின்னர் அதற்கான முயற்சியில் ஈடுபடுமாறு குருநாதரின் ஆணைக்கிணங்க நாங்கள் அனைவரும் ஞான சபை கிளைக்கு இடம் தேடி பல இடங்களில் ஆய்வு செய்தோம் . அதேசமயம் இடம் வாங்க நேரிட்டால் பணம் தேவைப்படும் என்பதை உணர்ந்து அன்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு தொகையை சேமித்து குருநாதரிடம் சமர்ப்பித்தோம். சுமார் ஒரு மாத காலம் நல்ல இடம் அமைய வேண்டும் என்று மேல்மருவத்தூர் அருகில் உள்ள பல இடங்களை சென்று பார்த்து வந்தோம். பின்னர் மேல்மருவத்தூர் அருகில் சோத்துப்பாக்கம் எனும் கிராமத்தில் எழில் மிகு பூங்கா நகரில் 1090 சதுர அடி விற்பனைக்கு வந்தது. மேலும் எங்கள் அனைவரின் சேமிப்பு போக இடத்தை வாங்குவதற்கு மீண்டும் அதிக நிதி தேவைப்பட்டது .
இதை உணர்ந்து கொண்ட எங்கள் அருட்குருநாதர் இடம் பத்திரப்பதிவு செய்வதற்கான மீதிப் பணத்தை ஞான சபை கிளை அருளாளர்களின் மூலமாக ஏற்பாடு செய்தார். 22.02.2019 அன்று மேல்மருவத்தூர் ஞான சபை கிளைக்கு சொந்தமான இடத்திற்கான பத்திரப்பதிவு செய்வதற்கு குருநாதர் மேல்மருவத்தூர் வந்தடைந்தார், இடத்தை ஆய்வு செய்த பின் அச்சரப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு இனிதே நடந்தது.
23.04.2019 அன்று கட்டிடப் பணிகள் மேற்கொள்வதற்காக பூமி பூஜை செய்ய திட்டமிடப்பட்டது. அன்றைய தினம் வாஸ்து நேரத்தில் குருநாதர் ஞானவள்ளல் மகா கனம் தங்க சுவாமிகள் தலைமையிலும், ஞான சபை தலைமை பொருளாளர் கனம் பொருந்திய பாண்டியன் அண்ணாச்சி முன்னிலையிலும் பூமி பூஜை விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. துணைத் தலைவர் கனம் பொருந்திய அறவாழி அவர்களும், ஞான சபை செயலாளர் கனம் பொருந்திய அய்யன் பாண்டியன் அவர்களும், அனைத்து ஞான சபைக் கிளை தலைவர்கள் மற்றும் உணர்வாளர்களும், பூங்கா நகர் குடியிருப்பில் உள்ள குடும்பத்தினரும் பூமி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குருநாதரின் கருணை உள்ளத்தாலும், அனைத்து ஞான சபை கிளை அன்பர்களின் உதவியாலும் மேல்மருவத்தூர் ஞான சபை கிளை தியான அரங்க கட்டிடப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. கட்டிட வேலைகள் தொடங்கி சுமார் ஆறு மாத காலத்திற்குள் 90 சதவீத பணிகள் முடிவடைந்தன. ஞான சபை கிளை கட்டிடப் பணிகள் நடைபெறும் போது நீ மேல்மருவத்தூர் ஞான சபை அன்பர்கள் ஒவ்வொருவரும் அரும்பணி ஆற்றி மிகுந்த ஒத்துழைப்பையும் தந்தார்கள்.






2020 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் தீபாவளி திருநாளின் மறுநாள் 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மேல்மருவத்தூர் ஞான சபை கிளையின் திறப்பு விழா, மற்றும் குருநாதரின் 82 ஆம் அகவை இனிய பிறந்தநாள் விழா குருநாதர் தலைமையில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. திறப்பு விழா நாளன்று குருநாதர் தனது அருட்கதிர்வீச்சால் சீடர்கள் அனைவருக்கும் அருளாசி வழங்கியதும் குருநாதர் ஞானவள்ளல் தனது திருகரங்களால் பசி பிணி நீங்க அன்னக்கொடியேற்றிய தருணமும், அக இருள் நீங்கிட பயிற்சி கூடம் தியான அரங்கத்தில் குருநாதர் திருக்கரங்களால் தீப ஒளி ஏற்றிய நிகழ்வும், அனைத்து ஞான சபை அன்பர்களின் வருகையும், அருளாளர்களின் செவிக்கு இனிய சொற்பொழிவும், அவ்வப்போது வான் மழை பொழிந்து வாழ்த்திய தருணமும், எங்கள் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத நிகழ்வுகள் ஆகும்.
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை மேல்மருவத்தூர் - நிகழ்வுகள்
- தினசரி அதிகாலை தியானம் காலை 5.00 மணிக்கும் மற்றும் இரவு 7.00 மணிக்கு சத்சங்கம் குருவின் திருவருளோடு நடந்து வருகின்றது.
- ஒவ்வொரு மாதமும் அய்யன்பட்டி இராஜரி´ சங்கரசுவாமிகளின் ஒடுக்கம் பெற்ற மகம் நட்சத்திரத்தில் பூசை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடந்து வருகின்றது.
- ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி மற்றும் அமாவாசை திருக்கூட்டம் இரவு 10.00 மணிக்கு நடந்து வருகின்றது.
- ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு திருக்கூட்டம் மற்றும் சமாராதனையும் நடைபெற்று வருகின்றது.
- பெண்களுக்கான தியானம் வியாழக்கிழமை தோறும் மாலை 4.00 மணி அளவில் நடந்து வருகின்றது.
- ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறுதோறும் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றம் திருக்கூட்டம் நடந்து வருகின்றது.
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை மேல்மருவத்தூர் - புகைப்படங்கள்
















தொடர்புக்கு
தியான மண்டபம் : முகவரி
செங்கல்பட்டு மாவட்டம்.