"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்
R. ராமேஷ்வரி
கூட்டாம்புளி
திரு.ராஜ் நாராயணன் மனைவி ராமேஸ்வரி எழுதிக் கொள்வது. பதிமூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள். உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அப்படி என்றால் என்னவென்று எனக்குத் தெரியாத காலத்தில் எனக்கு உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையை அறிமுகப்படுத்தி தந்த சக்திவேல் அண்ணனுக்கு மிக்க நன்றி. ஐயா தங்கசுவாமிகள் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது அவர்களையும் அறிமுகப்படுத்தி தந்த சக்திவேல் அண்ணனுக்கு மிக்க நன்றி. எப்படி சக்திவேல் அண்ணன் பழக்கம் என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால் திடீரென்று ஒரு நாள் வந்து ராஜ், வா நாம் சபைக்கு போவோம் என்று வீட்டில் வந்து அழைத்தார்கள். சரி நானும் வாரேன் என்று சபைக்கு கிளம்பிவிட்டார்கள். அதுதான் எங்களுக்கு முதல் தொடக்கம் சபையை பற்றி தெரிந்து கொள்வதற்கு. முன்னால் என் கணவர் ராஜ் அவர்களுக்கு குடிப்பழக்கம் சற்று இருந்தது. நாட்கள் செல்ல செல்ல அதிகமாகியது. வீட்டில் ரொம்ப தொந்தரவு. எல்லோருமே சக்திவேல் அண்ணனிடம் சபைக்கு கூட்டி போங்கள் அப்போது தான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்று சொல்வோம். இதுவெல்லாம் இரண்டு குழந்தைகள் இருக்கும்போதே நடந்தது. அதன்பின் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என ஐயாவிடம் கேட்கலாம் என்று எனது கணவர் குடி போதையில் அய்யாவிடம் கேட்டார்கள். அதற்கு ஐயா அவர்கள் இலக்கியா என்று பெயர் சூட்டினார்கள்.”
ஊரில் எல்லோரும் கேவலமாக பேச ஆரம்பித்தார்கள். அந்த அவமானத்தையும் தாங்கி கொண்டுதான் வாழ்ந்தோம். நாட்கள் ஓடின. ஆனால் போதையை நிறுத்தவே இல்லை. அதிகமாகிக் கொண்டே இருந்தது. பக்கத்தில் ஒரு அக்கா சொன்னார்கள். அவனுக்கு செய்வினை வைத்திருக்கிறார்கள். அதை முதலில் பாருங்கள் என்றார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் சக்திவேல் அண்ணனிடம் சொன்னேன். அப்படி ஒன்றும் கிடையாது. நம்ம ஐயாவிடம் சொல்லி சரி செய்து விடலாம் என்று கூறினார்கள். அப்போதும் எனக்கு முழு நம்பிக்கை கிடையாது. செய்வினைக்கு பார்ப்போம் என்று ஒரு செயின் அடகு வைத்து ரூபாய் ஏழாயிரம் செலவு செய்தோம். ஆனால் அதுவும் கேட்கவில்லை. அதற்கு பிறகு சக்திவேல் அண்ணனிடம் சொன்னேன்.
சக்திவேல் அண்ணன் ராஜ்க்கு அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது. அவனை குணப்படுத்தி விடலாம் நீ நம்பிக்கையோடு இரு என்று கூறினார்கள். அவனுக்கு எதுவும் வராது எப்படியாவது நான் அய்யாவிடம் அவனை சரி செய்ய சொல்லி கேட்கிறேன் என்று எங்கள் குடும்பத்திற்கே ஒரு நம்பிக்கை சொன்னார்கள். சக்திவேல் அண்ணன் எனக்கு ஒரு விவரம் சொல்லி தந்தார்கள், நீ விளக்கு ஏற்றி சங்கரசுவாமி அய்யாவை தங்கசுவாமிகள் அய்யாவை நினைத்து தூங்கி எழுந்தவுடன் தியானம் செய். மாலை உறங்கும் முன் தியானம் செய். விளக்கு ஏற்றவில்லை என்றால் லைட் வெளிச்சம், இல்லையென்றால் ஏதாவது ஒரு வெளிச்சத்தை பார்த்து இருவரையும் நினைத்து தினமும் தியானம் செய். அவனை எப்படியாவது திருத்தி விடலாம் என்று கூறி எனக்கு நம்பிக்கை தந்தார்கள்.
ஐயா சொன்னதுக்காக மட்டும் தான் 200 ரூபாய்க்கு பண்டம் வாங்கி வந்தேன் இல்லை என்றால் அதையும் குடித்திருப்பேன் என்று என்னிடம் சொன்னார்கள். இனிமேல் அவங்களிடம் ரூபாய் எதுவும் கொடுக்காதீர்கள் ஐயா என்று சொல்லத்தான் இங்கு வந்தேன். ஐயா சொன்னாங்க என்னிடம், அது என்ன அது போனா போகட்டும் இந்தா 500 ருபாய். நீ பிள்ளைக்கு பண்டம் வாங்கி விட்டு போ என்று என்னிடம் தந்தார்கள். எனக்கு ஒரே அழுகையாக வந்தது. பாதி மனது வாங்க சொல்லுது, பாதி மனசு வாங்க வேண்டாம் என்று சொல்லுது. அதற்கு பிறகு எனக்கு வேறு வழி தெரியலை. துட்டுக்கு ரொம்ப கஷ்டம் அதனால அய்யா தந்த பணத்தை நான் வாங்கிக் கொண்டேன். இலக்கியா பிறந்த நாளில் இருந்து சபைக்கு நான் செல்ல ஆரம்பித்தேன். இலக்கியா 3 மாத குழந்தையாக இருந்தபோது நான் சிவத்தையாபுரம் சபைக்கு வர ஆரம்பித்தேன்.
அடிக்கடி வர ஆரம்பித்தேன். வாரத்தில் 4 நாட்களும் சிவத்தையாபுரம் சபையில்தான் இருப்பேன். எதுக்கு என்று கேட்டால் வீட்டில் ஒரே சண்டை எங்கள் அத்தை பிள்ளையை தூக்கிக்கிட்டு சபைக்கு போ மீதி இரண்டு பிள்ளைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுவார்கள். அந்த தைரியத்தில்தான் நான் இலக்கியாவை 3 மாதத்திலேயே தூக்கிக்கிட்டு பால் டப்பா பிஸ்கெட் தண்ணீர் பாட்டில் இவை அனைத்தையும் கொண்டு சபை முன் மண்டபத்தில் தான் இலக்கியாவை கிடத்தி போட்டு விட்டு அதிலே இருப்பேன். எந்த நேரமும் பார்க்காமல் அப்போதே நான் ஐயாவை பார்க்க இலக்கியாவை தூக்கி கொண்டு வருவேன். மூன்று பிள்ளைகளுக்கும் 3 ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் வாங்க வழியில்லாமல் இருந்தது. எனக்கென்று என் குடும்பத்திலும் சரி என் வீட்டுக்காரர் குடும்பத்திலும் சரி, உதவி செய்ய ஆட்கள் இல்லை. 3 ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் வாங்கி அதில் மொத்தம் 9 பிஸ்கெட் இருக்கும் அதை மூன்று பிள்ளைகளுக்கும் ஒரு வாரம் வைத்து கொடுப்பேன்.
அய்யாவிடம் நான் போய் அய்யா இப்படி ஜாதககாரர் சொல்கிறார் என்று கூறினேன். அய்யா சொன்னார்கள் அவர் என்ன சொன்னாரோ அதைப்போலவே செய் என்று கூறினார்கள். சரி என்று வீட்டிற்கு வந்து விட்டேன். எனது கணவர் மருத்துவமனையில் இருந்தார்கள். மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ச் செய்து கூட்டி வந்த பிறகு வாரம் வாரம் கோவிலுக்கு போய் கொண்டிருந்தேன். எனது கணவர் எந்த கோயிலுக்கு போகிறாய் என்று கேட்டார்கள். ஜோசியர் வாரம் ஒரு முறை சனீஸ்வரரை சுற்றி கும்பிடு உன் கிரகம் சரியாகும் என்று சொன்னார்கள் என்று சொன்னேன் . எனது கணவர் அதற்கு வியாழன்தோறும் குருவுக்கு உகந்தநாள் வியாழன்தோறும் அய்யாவை பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று நினைத்து வா அது உனக்கு நன்றாகவே நடக்கும். ஆனால் நல்லதே நினை நல்லதே நடக்கும் என்று மனதினில் நினைத்து அய்யாவை பார்த்து வா வேற எதுவும் நினைக்காதே என்று சொன்னார்கள். அவர்கள் சொல்லி சுமார் 5 வருடம் ஆகிவிட்டது. நானும் அதை இன்றும் கடை பிடித்துக்கொண்டு வந்துவிட்டேன். இந்த பூமியில் வாழும் கடைசிவரையிலும் இதை கடைபிடிக்க வேண்டும் என்று சங்கரரையும் நம் குருவையும் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.அவர்கள் மருத்துவமனையை விட்டு வந்து ஐந்தாண்டுகள் ஆகிறது undefined மருத்துவமனையிலிருந்து வந்தது முதல் அவர்கள் குருநாதரே அவர்களின் மாபெரும் கருணையால் சுத்தமாக குடிப்பதை விட்டுவிட்டர்கள் இன்று நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் வாழ்வதற்கு குருநாதரே காரணம் .
இந்த சபைக்கு வரும் போது பாண்டியன் அண்ணாச்சி என்றால் யார் என்று எனக்கு தெரியாத காலம் உண்டு. இன்றைக்கு அவர்களுடன் அவர் குடும்பத்துடன் எப்படி எங்கள் குடும்பம் இணைந்தது என்று எனக்கு தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது அய்யாவும் பாண்டியன் அண்ணாச்சியும் எங்களை அவங்க பார்வையில் வைக்கனும் என்று நினைத்ததனால்தான் அவங்களோடு இருக்க முடிகிறது என்று என்னால் உணர முடிகிறது. நாங்கள் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தோமோ இந்த ஜென்மத்தில் ஐயாவோடு இணைந்து இருக்கின்றோம். இது எப்பவும் நிலைத்திருக்க என் குடும்பத்தில் அனைவரும் வேண்டிக் கொள்கிறோம். அய்யாவோட குருநாதர் அய்யாவை பார்த்து நீ இந்த கடலில் குதி என்று சொன்னார்களாம். வீட்டை கூட நினைக்காமல் உடனே கடலில் குருநாதர் குதித்தார்களாம் என்று கேள்விபட்டிருக்கிறோம். காலம் முழுவதும் அய்யாவுக்கும் பாண்டியன் அண்ணாச்சி வீட்டிற்கும் இப்படியே பணி செய்து கொண்டே எங்கள் காலங்களை கழிக்க நாங்களும் முடிவு எடுத்துக் கொண்டோம்.